Advertisment

ம.பி. பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்த நபர் கைது

புதன்கிழமையன்று மிகவும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றான கொய்லா பதாக்கில் நடைபாதையில் பெண் கற்பழிக்கப்பட்டார். பலர் இந்த சம்பவத்தை பார்த்தனர், ஆனால் யாரும் தலையிடவில்லை.

author-image
WebDesk
New Update
MP Rape case

Man who filmed rape on busy footpath in Ujjain arrested

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில், பட்டப்பகலில் நடைபாதையில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Advertisment

வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல் போனையும் போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து உஜ்ஜைன் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா கூறுகையில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, இதை வீடியோ எடுத்து வைரலாக்கியது யார் என்பதைக் கண்டறிய மாவட்ட காவல்துறை, சைபர் மற்றும் சமூக ஊடக குழுக்கள் நியமிக்கப்பட்டனர். சில மணிநேரங்களில், அந்த வீடியோ எடுத்த குற்றவாளியை, இந்த குழு  கண்டுபிடித்தது.

குற்றம் சாட்டப்பட்ட முகமது சலீம் (42) நாக்டாவில் வசிப்பவர். ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக பணிபுரிபவர். இவர்மீது ஏற்கெனவே வழக்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது மொபைல் போன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்று சர்மா கூறினார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, புதன்கிழமையன்று மிகவும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றான கொய்லா பதாக்கில் நடைபாதையில் பெண் கற்பழிக்கப்பட்டார். பலர் இந்த சம்பவத்தை பார்த்தனர், ஆனால் யாரும் தலையிடவில்லை. அந்த வழியாக சென்ற சலீம் இதை வீடியோ எடுத்தார்                                                                                                    

அந்த பெண், தனது புகாரில் குற்றம் சாட்டப்பட்டவரை லோகேஷ் என்று குறிப்பிட்டுள்ளார், எஃப்ஐஆர் பதிவு செய்த இரண்டு மணி நேரத்தில் அவன் கைது செய்யப்பட்டான். லோகேஷ், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, மது குடிக்க வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்கிறது. ஆனால் கொல்கத்தா பாலியல் வன்கொடுமை கொலை குறித்து வாய் திறக்காமல் இருக்கிறது.  மத்தியப் பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி உள்ளது, யார் குற்றம் செய்தாலும் அரசாங்கம் கடுமையாகக் கையாளும். யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். அது உஜ்ஜயினியாக இருந்தாலும் சரி அல்லது மாநிலத்தில் எங்கு இருந்தாலும் சரி. பிரதமரின் தலைமையில் நல்லாட்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், என்றார். அரசியல் செய்கிறவர்கள் அவர்கள் ஆளும் மாநிலங்களை கவனித்துக் கொண்டால் நல்லது, என்றார். உஜ்ஜைனி, யாதவின் சொந்த ஊராகும்.

Read in English:  Man who filmed rape on busy footpath in Ujjain arrested

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment