கொரோனா மருத்துவமனையாக மாறிய கார் நிறுத்துமிடம்; கோவிட்19க்கு எதிராக தீவிர நடவடிக்கை

ஏற்கனவே மருத்துவ  ஊழியர்கள் தேவை என்று கேரள அரசிடம் உதவியும் கேட்டுள்ளது மகாராஷ்ட்ர அரசு. 

By: May 26, 2020, 4:29:59 PM

Mahalaxmi racecourse parking space has been converted into corona hospital :  கொரோனா வைரஸ் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அளவுக்கு அதிகமாக பரவி வருகிறது. இந்த காரணத்தால் அங்கே மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ  ஊழியர்கள் தேவை என்று கேரள அரசிடம் உதவியும் கேட்டுள்ளது மகாராஷ்ட்ர அரசு.

மேலும் படிக்க : வீட்டில் குழந்தை பெற்றால் குற்றமா? வாடகை வீட்டை விட்டு வெளியேறிய தம்பதிகள் !

இந்நிலையில் மும்பைக்கு அருகே இருக்கும் மகாலக்‌ஷ்மி என்ற  பகுதியில் அமைந்திருக்கும் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தை மருத்துவமனையாக மாற்றியுள்ளது அம்மாநில அரசு. மகாராஷ்ட்ராவில் இதுவரை 53 ஆயிரத்து 272 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ஈகைப் பெருநாளில் 200 ஏழைகளுக்கு பிரியாணி பரிமாறிய சென்னை காஜா பாய் கடை!

வெளிமாநிலங்களில்  இருந்து இங்கே வந்தவர்களுக்காக குவாரண்டைன் வசதி மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சேவைகளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை எடுத்தவர் மும்பையில் வசித்து வரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்பட செய்தியாளர் கணேஷ் சிர்சேகர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Mahalaxmi racecourse parking space has been converted into corona hospital

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X