Maharashtra, Haryana Assembly Election Results Counting: மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் அக். 21ல் சட்டசபை தேர்தல் நடந்தது. மஹாராஷ்டிராவில் 63 சதவீதமும் ஹரியானாவில் 65 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின. இன்று(அக்.,24) ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. லோக்சபா தேர்தலுக்குப் பிறகுமுதல் முறையாக நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் இந்த இரு மாநிலங்களில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இரு மாநிலங்களிலும் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கே வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளதால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் உள்ள சதாரா லோக்சபா தொகுதி மற்றும் பீஹாரில் உள்ள சமஸ்டிபூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்துள்ளது. இத்தொகுதிகளின் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளன.
Live Blog
Haryana Maharashtra Election Results 2019 News: மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை இங்கு உடனுக்குடன் லைவ் அப்டேட்ஸ் ஆக தெரிந்துகொள்ளலாம்
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லியில் உள்ள பாஜக தலைமைகத்தில் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினர்.
அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி 2.0 மிக வேகமாக செயல்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் கடந்த தேர்தலைவிட இந்த முறை பாஜகவின் வாக்குவங்கி 3% உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், தீபாவளி பண்டிகைக்கு மகாராஷ்டிரா, ஹரியானா மக்கள் பரிசளித்துள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக அரசின் 5 ஆண்டு உழைப்புக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. பாஜகவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த வெற்றி. இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது. அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்கள் புதிய உயரத்தை அடையும் என்று கூறினார்.
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு "50 - 50" அதிகாரப் பகிர்வுக்கான ஃபார்முலாவை நினைவுபடுத்திய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, "தனது கட்சி வளர அனுமதிக்க வேண்டும்" என்று வியாழக்கிழமை கூறினார். மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற இடங்களில், பாஜக 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, சிவசேனா 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும், பாஜக 2014 இல் பெற்ற எண்ணிக்கையில் 20 இடங்களுக்கு மேல் தோல்வியை சந்தித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பாஜக 26 இடங்களை வென்றுள்ளது. 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பாஜக மொத்தம் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 20 இடங்களை வென்றுள்ளது. 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் காங்கிரஸ் மொத்தம் 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜன்னாயக் ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) 10 இடங்களை வென்றுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சதாரா மக்களவைத் தொகுதியையும், பார்லி சட்டமன்றத் தொகுதி முடிவுகள் அதிர்ச்சியளிக்கிறது என்றார். "சதாரா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், பார்லி சட்டமன்றத் தொகுதி, ஆகிய இரண்டு தொகுதி முடிவுகளும் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எங்களுடைய 6 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். நாளை முதல் அதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்போம். இன்று எங்கள் வெற்றியைக் கொண்டாடும் நாள், அதைச் செய்வோம்" என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தன்னை அணுகிய 15 சுயேச்சைகளுடன் தொடர்பில் உள்ளதாக கூறினார். “15 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் எங்களுடன் வரத் தயாராக உள்ளனர். மற்றவர்களும் வரலாம். ஆனால், இந்த 15 பேர் எங்களுடன் வருவார்கள். அவர்களில் பெரும்பாலோர் பாஜக அல்லது சிவசேனா அதிருப்தியாளர்கள் என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசு அமைப்பது குறித்து: “சிவசேனாவுக்கும் எங்களுக்கும் (பாஜக) இடையே முடிவு செய்யப்பட்டுள்ளவற்றின் படி நாங்கள் செயல்படப் போகிறோம். என்ன முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது சரியான நேரத்தில் தெரியப்படுத்தப்படும்.”
நுஹ் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாஜகவின் ஜாகிர் உசைன், காங்கிரசின் அஃப்தாப் அஹமதுவிடம் தோல்வி.
அஃப்தாப் அஹமது 4,038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
ஜாகிர் உசைன் 2014 இல் ஐ.என்.எல்.டி கட்சி சார்பில் வென்றார். ஆனால், அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜகவில் சேர்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா ஆகியோர் இன்று மாலை பாஜக தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடையே சந்தித்து உரையாற்றவுள்ளனர். பாஜக நாடாளுமன்ற வாரியமும் இன்று கட்சி தலைமையகத்தில் கூடுகிறது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக-சிவசேனா கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுகிறது என்று கூறினார். இதற்கு மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு? முதல்வர் பதவிக்கு ஒரு ஃபார்முலா உள்ளது. அது வெளிப்படையான முறையில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சரும் தாராவி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான வர்ஷா கெய்க்வாட் 11,824 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. இதன்மூலம் இவர் 4வது முறையாக தாராவி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெறுகிறார்.
வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்) - 53,954 வாக்குகள்
அஷிஷ் மோரே (சிவசேனா) - 42,130 வாக்குகள்
பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கிடம் ஹரியானா முடிவுக்கு நீங்கள் பூபிந்தர் சிங்கை பாராட்டுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, '100% புகழ்கிறேன். எங்கள் கட்சிக்கும், எங்கள் கட்சி ஊழியர்களுக்கும் அந்த பாராட்டுக்கள். நாங்கள் உண்மையில் வென்று காட்டியிருக்கிறோம். இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம்.
துஷ்யந்த் சவுதாலா, ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்து: விவி பாட்- இயந்திரத்திலிருந்து சீட்டுகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. சான்றிதழ் கிடைத்தவுடன், நான் அனைவருடனும் கலந்துரையாடுவேன். நாளை எம்.எல்.ஏ.க்களுடன் சந்திப்புகளை நடத்துவேன். எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன். மிக விரைவாக ஏதாவது சொல்வதென்றால், ஹரியானா ஒரு மாற்றத்தை விரும்புகிறது, ஜே.ஜே.பி அந்த மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.
தேர்தல் முடிவுகள் குறித்து பிரியங்கா காந்தி: சமீபத்திய போக்குகளை நான் காணவில்லை, இரண்டிலும் (ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா) மிகவும் மகிழ்ச்சி. உ.பி.யில் எங்கள் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வொர்லி தொகுதியில் சிவசேனா கட்சியின் இளைஞர் அணியான யுவசேனா கட்சி தலைவர் ஆதித்ய தாக்ரே, வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் மானேவைவிட 60 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.
ஆதித்ய தாக்ரேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று சிவசேனா தரப்பில் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள், முதல்வர் மனோகர் லால் கட்டாரின் நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்ட அதிருப்தியை காட்டுவதாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த ஹூடா கூறியதாவது, பாரதிய ஜனதா கட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள்மட்டுமல்லாது, அனைத்து சிறிய கட்சிகளும் காங்கிரஸ் உடன் சேர்ந்து நிலையான ஆட்சியை வழங்க ஒன்றிணைய வேண்டும். சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் காங்கிரஸ் உடன் இணைய சில கட்சிகள் தடைகள் ஏற்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். இந்த தேர்தலில், அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய பா.ஜ. அரசுக்கு மக்கள் மிகச்சரியான தீர்ப்பு அளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ஆதித்ய தாக்ரேவுக்கு வழங்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுத்தியுள்ளது. மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரவுட் கூறியதாவது, மகாராஷ்டிரா சட்டசபையின் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், முற்பகல் 11.30 மணிநிலவரப்படி, பா.ஜ., - சிவசேனா கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த கூட்டணி தலைமையிலான ஆட்சியே இங்கு அமைய உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் 50 சதவீத பங்கு கேட்பதாக உள்ளோம். ஆதித்ய தாக்ரேவுக்கு, முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள், பங்கு வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பங்குவர்த்தக துவக்கத்தில் 250 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய சென்செக்ஸ், தற்போதைய அளவில் 39,026.79 என்ற அளவில் உள்ளது, நிப்டி 30 புள்ளிகள் ஏற்றம் பெற்றுள்ளது
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் கட்சியின் நிலை மிக பரிதாபமாகவே உள்ளது. மகாராஷ்டிராவில் 37 இடங்களிலும், ஹரியானாவில் 33 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்வியும் மற்றும் கட்சிக்கு நேரடி தலைமை இல்லாதது, இந்த தேர்தல்களில் கட்சி தலைவர்கள் சரியாக செயல்படாதது உள்ளிட்ட காரணங்களினாலேயே, காங்கிரஸ் கட்சி பின்தங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பட்னாவிஸ், தனது முதல்வர் பதவியை, மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்வார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், பா.ஜ. கட்சி 106 இடங்களிலும், சிவசேனா கட்சி 73 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
பட்னாவிஸ் மீண்டும் முதல்வர் ஆவார் என்ற நிலையில், ஆதித்ய தாக்ரேவுக்கு என்ன பதவி வழங்கப்படும் என்பதே, அனைவரின் கேள்வியாக உள்ளது.
2014ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ., 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்ரே முன்னிலை பெற்றுள்ளார்.
சிவசேனா கட்சியின் இளைஞர் அணியான யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்ரே நியமிக்கப்பட்ட பின்னர் அவர் போட்டியிடும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானாவில் முதல் கட்டார் முன்னிலை பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், தலைநகரான மும்பையில் வெற்றி பெறும் கட்சியே, மாநிலத்தில் ஆட்சி அமைத்து வருகிறது. கடந்த 3 தலைமுறைகளாக இந்த நிகழ்வு அரங்கேறி வருகிறது. இந்த வெற்றிநடை தொடருமா அல்லது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பதற்கு இன்று விடை தெரிந்து விடும்.
மஹாராஷ்டிராவில் 63 சதவீதமும் ஹரியானாவில் 65 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 93 வாக்குகளில் 63 வாக்குகள் பா.ஜ.வுக்கு கிடைத்துள்ளன.ஹரியானாவில், 53 இடங்களில் 40 இடங்கள் பா.ஜவுக்கு கிடைத்துள்ளன
ஹரியானா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்த வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, இன்டர்நெட் வசதியை நிறுத்திவைக்க வேண்டும் என ஜன்நாயக் ஜனதா கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு 16 பக்க அளவிலான கடிதம் எழுதியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களின் அருகே ஜாமர்களை பொருத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வெற்றியை கொண்டாட மும்பையில் உள்ள பா.ஜ. அலுவலகம் தற்போதே தயாராகி வருகிறது. வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தொண்டர்களுக்கு வழங்க, கட்சி அலுவலகத்தில் லட்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளன
(Express Photo: Pradip Das)
இதை தவிர உத்தர பிரதேசத்தில் 11; குஜராத்தில்ஆறு; கேரளா மற்றும் பீஹாரில் தலா ஐந்து; பஞ்சாப் மற்றும் அசாமில் தலா நான்கு; சிக்கிமில் மூன்று; ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் தலா இரண்டு;அருணாச்சல பிரதேசம், ம.பி., ஒடிசா, சத்தீஸ்கர், புதுச்சேரி, மேகாலயா மற்றும் தெலுங்கானாவில் தலா ஒரு சட்டசபை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights