கேட்டதை விட மூன்று மடங்கு பணத்தை வழங்கிய அதிசய ஏ.டி.எம்!

இந்த ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம்.,மில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு அதிகமாக மூன்று மடங்கு பணம் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிட்கோ பகுதியில் பிரபல தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்கின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. பிரதான சாலையில் அமைந்திருக்கும் ஏ.டி.எம்., மையம் என்பதால் 24 மணி நேரமும் செயல்பட கூடியது. நேற்று இரவு இந்த ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வாடிக்கையாளர்கள் பதிவு செய்த தொகையை விட மூன்று மடங்கு பணம் அவர்களின் கைகளுக்கு வந்துள்ளது. ‘டெபிட்’ அட்டை மூலம், 1,000 ரூபாய் எடுத்தவருக்கு, 5,000 ரூபாயும்; 4,000 ரூபாய் எடுத்தவருக்கு, 20 ஆயிரம் ரூபாயும் வந்தது. அதே நேரத்தில் அவர்களின் கணக்கில் பணம் குறைந்துள்ளதா? என்று சோதித் து பார்த்ததில் அதில் இவர்கள் பதிவு செய்த தொகை போக மீதம் இருந்த கணக்கை மட்டுமே ஏ.டி.எம் இயந்க்திரம் காட்டியுள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் , தங்களிடம் இருந்த டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்து முடிந்த வரை பணம் எடுக்க முயன்றுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதை அடுத்து பொதுமக்கள் பலரும் அந்த ஏடிஎம்- மையதை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். கூட்டத்தை சமாளிக்க முடியாத காவல் துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகிகளுக்கு உடனடியாக கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வங்கி நிர்வாகிகள் அந்த ஏ.டி எம் மையத்தை உடனடியாக மூடி சீல் வைத்தனர். பின்பு இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த வங்கி துணை மேலாளர் பிரவீன் பைஸ் “ ஏ.டி.எம்.,மில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பண அட்டை பதிவுகளின் அடிப்படையில் அதிகம் பணம் எடுத்தவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படும். இயந்திரத்த்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது”என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

கொடுப்பதை போல் கொடுத்து விட்டு கடைசியில் பணத்தை வாங்கி விட்டனர் என்று புலம்பி தள்ளி வருகின்றனர் சிட்கோ பகுதி மக்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close