Advertisment

ரூ.40 ஆயிரம் கோடிக்காக தான் முதல்வர் நாடகம்! பாஜக எம்.பியின் கருத்தால் அதிர்ந்த ஃபட்னாவிஸ்

மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு பைசா கூட அனுப்பப்படவில்லை - ஃபட்னாவிஸ் விளக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Maharashtra BJP MP Anantkumar Hegde says 80-hour CM drama

Maharashtra BJP MP says 80-hour CM drama

Maharashtra BJP MP Anantkumar Hegde says 80-hour CM drama : மாநில அரசின் கருவூலத்தில் இருந்த 40 ஆயிரம் கோடி ரூபாயை புதிய அரசு கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காகவே முதல்வர் பதவியை ஏற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ் என்று அனந்தகுமார் ஹெக்டே பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் பாஜகவில் நிலவி வருகிறது.  அனந்தகுமார் ஹெக்டே “மாநில அரசின் கருவூலத்தில் இருந்த 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசுக்கு அளிக்கவே 80 மணி நேரம் முதல்வராக நாடகம் நடத்தினார்” என்று கூறியுள்ளார். கர்நாடக பாஜக தலைவரின் இந்த அறிக்கையால் மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தில் கடும் வாக்கு வாதம் நிலவியது.

Advertisment

ஆனால் மகாராஷ்ட்ரா எதிர்கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். இவை ஆதாரமற்றவை, பொய்யானவை என்றும் கூறியுள்ளார். சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி கட்சியினர் தேவேந்திர ஃபட்னாவிஸின் இந்த செயல் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு செய்யப்பட்ட துரோகம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

பாஜக முன்னாள் எம்.பியின் இந்த கருத்திற்கு பாஜக வட்டாரம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த கருத்து தேவையற்றது என்றும், சங்கடமான சூழலை உருவாக்குகிறது என்றும் பலரும் கூறி வருகின்றனர்.  உத்தர கன்னடாவில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய அனந்தகுமார் ஹெக்டே, ”மகாராஷ்ட்ராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் 80 மணி நேரம் தான் முதல்வராக இருந்தார். பின்பு பதவி விலகினார். இந்த நாடகம் ஏன் நடைபெற்றது? பாஜக மெஜாரிட்டி பெறாது என தெரிந்தும் அவர் ஏன் முதல்வரானார்? இந்த கேள்விகள் தான் எங்கும் எழுகிறது. ரூ. 40 ஆயிரம் கோடி முதல்வரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனை காங்கிரஸ், சிவசேனா, என்.சி.பி ஆட்சியில் இருந்து பாதுகாக்கவே அவர் முதல்வரானார். எப்படியும் அந்த பணம் மகாராஷ்ட்ரா வளர்ச்சிக்கு போகப்போவதில்லை” என்று கூறினார்.

23ம் தேதி தேவேந்திர ஃபட்னாவிஸுக்கும், அஜித் பவாருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிகளை பகத் சிங் கோஷ்யாரி முன்பு ஏற்றுக் கொண்டனர். மூன்று நாட்களுக்கு பிறகு இருவரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். தேவேந்திர ஃபட்னாவிஸ் வெறும் 15 மணி நேரத்தில் கருவூலத்தில் இருக்கும் பணம் எங்கே சென்று சேர வேண்டுமோ அங்கே அனுப்பிவிட்டார். இது தான் அடுத்து நடக்க போகிறது என்று நாங்கள் அறிந்த பின்பு தான் இந்த நாடகம் அரங்கேறியது. பதவிப்பிரமாணம் செய்து கொண்ட 15 மணி நேரத்தில் பணம் பத்திரமாக சென்று சேர வேண்டிய இடத்திற்கு அனுப்பப்பட்டது. பின்பு என்ன நடந்தது என்று நம் அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறினார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ் இது குறித்து கூறுகையில், ஹெக்டே என்ன கூறினார் என்று தெரியாது. ஆனால் ஊடகங்கள் வாயிலாக நான் அறிந்து கொண்டேன். அந்த புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு பைசா கூட அனுப்பப்படவில்லை. அதே போன்று மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கும் பணம் ஏதும் கிடைக்கவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஆதாரமற்றவை என்று அவர் கூறினார்.

புல்லட் ட்ரெய்ன் குறித்து அவர் கூறிய போது, ஒரு திட்டத்திற்காக மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பொறுப்புகள் என்னென்ன என்று உணர்ந்தவர்கள் இது குறித்து நன்கு அறிவார்கள். மாநில அரசுக்கு நிலம் கையகப்படுத்தும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.  பாஜக எம்.பி. 40 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு கை மாறியது என்று கூறுகிறார். இது மகாராஷ்ட்ராவிற்கு இழைக்கப்பட்ட குற்றம். பிரதமர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

ஃபட்னாவிஸ் இதை செய்யவில்லை என்று கூறினால் நாம் நம்புவோம். ஆனால் இதற்கான முயற்சிகளை அவர் செய்திருந்தால் என்றால் சட்டமன்ற படிக்கட்டுகளை ஏறக்கூட அவருக்கு உரிமை இல்லை என்றும் அவர் கூறினார். என்.சி.பி. செய்தி தொடர்பாளர் நவாம் மாலிக் கூறிகையில், பணத்தை திருப்பி அனுப்ப எல்லாம் வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை அப்படியாக இருந்திருந்தால் பிரதமர் தன்னுடைய பதவியை முதலில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment