Advertisment

மராட்டியத்தில் பாஜக 26 இடங்களில் போட்டி: தேவேந்திர பட்னாவிஸ்

ஷிண்டே தலைமையிலான அணிக்கு 18 சிவசேனா எம்.பி.க்களில் 13 பேரின் ஆதரவும், மற்றவர்கள் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

லோக்சபா மற்றும் சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில், கூட்டணி கட்சிகளை விட அதிக இடங்களை பாரதிய ஜனதா கட்சி கோரியுள்ளது.

devendra-fadnavis | மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 26 இடங்களில் பாஜக போட்டியிடும் என்று முன்னாள் முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள இடங்களில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் போட்டியிட உள்ளது.

Advertisment

மும்பையில் ஒரு நாளிதழுக்கு சனிக்கிழமை (நவ.25) அளித்த பேட்டியில் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர், “மகாராஷ்டிராவில் அமைப்பு மற்றும் தேர்தல் தளம் இரண்டிலும் பாஜக மிகப்பெரிய கட்சியாகும். எனவே அதிகபட்ச இடங்களைக் கோரும் உரிமை அதற்கு உண்டு. இரண்டாவதாக, ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், அஜித் பவார் தலைமையிலான என்சிபியும் பிரிந்து சென்ற பிரிவுகளாகும், இது அவர்களின் தேர்தல் தளத்தையும் அமைப்பு பலத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால் அவர்கள் குறைந்த இடங்களிலேயே போட்டியிட வேண்டியிருக்கும்” என்றார்.

லோக்சபா தேர்தல் ஏப்ரல்-மே 2024 இல் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது அதிக இடங்களுடன், மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் பாஜகவிற்கு மகாராஷ்டிரா முக்கியமானது. உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 80 மக்களவை இடங்கள் உள்ளன.
2019 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக 25 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பிரிக்கப்படாத சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிட்டன.
பாஜக 23 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சி 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்தையும், அதன் கூட்டணிக் கட்சியான என்சிபி நான்கு இடங்களையும் பெற்றன.
தலா ஒரு இடத்தில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றனர்.

ஷிண்டே தலைமையிலான அணிக்கு 18 சிவசேனா எம்.பி.க்களில் 13 பேரின் ஆதரவும், மற்றவர்கள் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
ஜூன் 2022 இல் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க ஷிண்டே பிரிவு பாஜகவுடன் இணைந்தது. ஒரு வருடம் கழித்து, ஜூலையில், அஜித் பவார் தலைமையிலான என்சிபி பிரிவு சிவசேனா-பாஜக அரசாங்கத்தில் இணைந்தது.

ஆங்கிலத்தில் வாசிக்க : Maharashtra BJP to contest 26 seats and leave 22 to allies in Lok Sabha polls: Fadnavis

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Maharashtra Bjp Devendra Fadnavis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment