Advertisment

தொடர் குழப்பத்தில் மகாராஷ்ட்ரா : துணை முதல்வர் பதவியை காங்கிரஸூக்கு தரக்கூடாது - என்.சி.பி வேண்டுகோள்

இரண்டு கட்சிகளின் மாநில தலைமையும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து தோல்வியுற, தேசிய தலைவர்கள் தற்போது இது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Maharashtra Cabinet expansion delay

Maharashtra Cabinet expansion delay

Sandeep A Ashar

Advertisment

Maharashtra Cabinet expansion delay : சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணியில் மகாராஷ்ட்ராவில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட சில நிமிடங்களிலே துணை முதல்வர் பதவி குறித்து கூட்டணிக்குள் சர்ச்சைகள் நிலவி வருகிறது. காங்கிரஸ் தரப்பு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று புதிய வேண்டுகோளை வைக்க, என்.சி.பி கட்சியோ காங்கிரஸின் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இரண்டு கட்சிகளின் மாநில தலைமையும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து தோல்வியுற, தேசிய தலைவர்கள் தற்போது இது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

To read this article in English

சபாநாயகர் பதவியை தவிர்த்து அமைச்சரவையில் உள்துறை, நிதி, வருமானம், கூட்டுறவு, நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு யாரை அமைச்சராக நியமனம் செய்வது என்ற குழப்பத்தில் இருந்து இன்னும் மீண்டு வராமல் தவித்து வருகின்றனர் மகா அகதி கூட்டணியினர். சனிக்கிழமை பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பின்னர், அமைச்சரவை பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அமைச்சரவை பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு துணை முதல்வர்கள்

நவம்பர் 27ம் தேதி தொடர்ந்து மூன்று கட்சியினரும் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு ஒரு முடிவுக்கு வந்தனர். அதன் படி அடுத்த 5 வருடங்களுக்கும் என்.சி.பி. உறுப்பினர் ஒருவர் துணை முதல்வராக பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியில் ஒருவர் சபாநாயகராக பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியினரும் தங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று புதிய கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

மூன்றாவது கட்சியாக செயல்பட விரும்பாத காங்கிரஸ் தற்போது உத்தவ் தாக்கரேயிடம் இரண்டு துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. ஒரு அரசின் முக்கிய முகங்களாக முதல்வரும், துணை முதல்வரும் செயல்படுவார்கள். எக்காரணம் கொண்டும் எங்கள் கட்சியோ, எம்.எல்.ஏவோ இந்த பதவியை விட்டுத்தருவதாக இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.

நேற்று (29/11/2019) இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு கட்சியின் மாநில தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மகாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர் பாலாசாஹெப் தோரட் என்.சி.பியின் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். ஆனாலும் அதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது என்.சி.பி. மேலும் துணை முதல்வராக அஜீத் பவாரை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது நவம்பர் 27ம் தேதி எடுக்கப்பட்ட முடிவே இறுதியானது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது என்.சி.பி.

காங்கிரஸ் தரப்பில் இருந்து முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சாவனை சபாநாயகர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்துவார்கள் என்று என்.சி.பி தரப்பு அறிவித்துள்ளது. 1999ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணி ஆட்சி அமைத்த நாட்களை இது நினைவுபடுத்துவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு கட்சி யாரை தங்களுக்கு கொடுத்த பதவிக்கு பரிந்துரை செய்கிறது என்பது அக்கட்சியின் உள்விவகாரம் என்று கூறியுள்ளது காங்கிரஸ். மேலும் பிரித்விராஜ் சாவன் மட்டுமல்லாமல் வர்ஷா கைக்வாத், மூத்த எம்.எல்.ஏ கே.சி. பத்வி ஆகியோரின் பெயரும் சபாநாயகர் பதவி பரிந்துரையில் இடம் பெற்றுள்ளது.

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment