மகாராஷ்டிரா தேர்தல்: பல இடங்களில் எதிரெதிராக போட்டியிடும் குடும்பத்தினர்

Maharashtra election contest all in the family: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் அவர்கள் அரசியல் கட்சிகளின் அடிப்படையில்...

சந்தீப் ஏ ஆஷர், கட்டுரையாளர்
Maharashtra election, contest all in the family:
அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் அவர்கள் அரசியல் கட்சிகளின் அடிப்படையில் பிளவுபட்டு நிற்கின்றனர். அவர்களில் சிலர் தங்கள் சொந்த தொகுதியை வெற்றிகொள்வதற்கு ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகின்றனர். இது இரண்டு சகோதரர்களுக்கு இடையிலான போட்டியாக இருந்தாலும் அல்லது மாமா – மருமகனுக்கு இடையிலான கடுமையான போட்டியாக இருந்தாலும் மகாராஷ்டிராவில் பல இடங்களில் இந்த தேர்தல் குடும்ப விவகாரமாக ஆகியுள்ளது. இது பற்றி காணலாம்.

ஒரு தேர்தல் மல்யுத்தம்
அஹேரி, விதர்பா

சட்டீஸ்கர் மாநில எல்லையாகவும் மாவோயிச கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதியான அஹேரியில் முந்தைய அரச குடும்ப உறுப்பினர்கள் இடையே மீண்டும் போட்டி ஏற்பட்டுள்ளதை பார்க்கலாம். அஹேரி தொகுதியில் ‘மகாராஜ்’ என்று பிரபலமாகக் குறிப்பிடப்படுபவர் அமைச்சர் அம்பேரிஷ் ராவ் அத்ரம். இவருக்கு எதிராக தரம்ராவ்பாபா அல்லது பொதுவாக ‘பாபா’ என்று அறியப்படும் அவருடைய மாமா நிறுத்தப்படுகிறார். தோற்கடித்தார், பின்னர் ஃபட்னாவிஸ் அரசாங்கத்தில் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த முறை, என்.சி.பியுடன் இருக்கும் அவரது மாமா அவருக்கு சவால் விடுத்துள்ளார். பர்மிங்ஹாமில் வணிகவியல் சட்டம் படித்த அம்பெரிஷ் தனது மாமாவை 2014 ஆம் ஆண்டு தோற்கடித்தார். பின்னர், அவர் தேவேந்திர பட்னாவிஸின் மாநில அரசாங்கத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த முறை, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இருக்கும் அவரது மாமா அவருக்கு சவால் விடுத்துள்ளார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியும் தனது வேட்பாளராக தீபக் அத்ரத்தை நிறுத்தியுள்ளது.

15 ஆண்டு கால பகை
நிலங்கா, மராத்வாடா

லத்தூரின் நிலங்காவில், பாஜகவின் உயர்மட்ட அமைச்சர் சாம்பாஜி பாட்டீல் நிலங்கேகர். இவர் 2014 தேர்தலில் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளரான அவரது மாமா அசோக்கிடமிருந்து எதிர்ப்பை தடுக்க முயற்சிக்கிறார். அசோக் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சிவாஜி பாட்டீல் நிலங்கேகரின் மகன். சிவாஜி பாட்டில் சம்பாஜிக்கு தாத்தா ஆவார்.

சம்பாஜியின் தந்தை திலீப்பின் மறைவுக்குப் பிறகு 2004 ஆம் ஆண்டில் குடும்ப சண்டை தொடங்கியது, அது இன்றும் தொடர்கிறது. அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற தனது தாத்தாவை 2004 ஆம் ஆண்டில் சாம்பாஜி முதலில் தோற்கடித்தார்.

குடும்பத்தில் குழப்பம்
புசாத், விதர்பா

நாயக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு நான்காம் தலைமுறை உறுப்பினர்கள் யவத்மாலின் புசாத் சீட்டுக்காக ஒருவருக்கொருவர் மோத உள்ளனர். இந்த தொகுதி கடந்த காலத்தில் இரண்டு முதல்வர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. மேலும், இது எப்போது காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தொகுதியாக இருந்துவந்துள்ளது. மாநிலத்தின் மிக நீண்ட கால முதல்வர், வசந்த்ராவ் நாயக் மற்றும் அவரது மருமகன், முன்னாள் முதல்வரான சுதாகர்ராவ் நாயக் ஆகியோர் கடந்த காலங்களில் இந்த தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளனர். இந்த முறை வசந்த்ராவின் பேரனும் முன்னாள் அமைச்சரும், தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான மனோஹர் ராவ் நாயக்கின் மகனுமான இந்திர நீல் போட்டியிடுகிறார். வசந்த்ராவ் பேரனை பாஜகவின் நிலே நாயக் எதிர்கொள்கிறார். மனோகர் நாயக் நிலேயை வளர்த்துக் கொண்டிருந்தபோது, கட்சியில் அடுத்தது யார் என்ற போட்டியால் அவர் 2016 -இல் பாஜகவில் இணைந்தார்.

சகோதரர்களின் யுத்தம்
மான், மேற்கு மகாராஷ்டிரா

காங்கிரஸ் கட்சியிலிருந்து மாறி கடந்த மாதம் பாஜகவில் இணைந்த ஜெய்குமார் கோர் இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட முயற்சிக்கிறார். ஆனால், அது அவருக்கு எதிராக கலகம் செய்த தனது சொந்த சகோதரருக்கு எதிராக போட்டியிட உள்ளார். 2009 ஆம் ஆண்டில் இருந்து இந்த இடத்தில் ஜெய்குமார் சுயேச்சையாக முதலில் வெற்றி பெற்றார். தற்போது சகோதரர்கள் இருவரும் இந்த பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாக களத்தில் இறங்கிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரபாகர் தேஷ்முக் முன்னிலையில் இருப்பது போட்டியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமா – மருமகன் போட்டி
பீட், மராத்வாடா

சிவ சேனா அமைச்சர் ஜெய்தத் க்ஷிர்சாகர் முன்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இருந்தார். இவர் அவரது மருமகன் சந்தீப்பிற்கு எதிராக தேசியவாத கட்சியை எதிர்க்கிறார். சந்தீப் அவரது மாமாவால் வளர்க்கப்பட்டவர். ஆனால், க்ஷிர்சாகருடன் நல்லுறவைப் ஏற்படுத்திக்கொள்ளாத அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை, சந்தீப்பை கட்சியின் மாற்று முகமாக விளம்பரப்படுத்தத் தொடங்கியபோது, இருவருக்கும் இடையே இந்த பிராந்தியத்தில் மோதல் ஏற்பட்டது.

தன்னை ஓரங்கட்டுவதற்காக தன்னையும் தனது மருமகனையும் பிரித்ததாகவும் க்ஷிர்சாகர் பவார் மீது குற்றம் சாட்டினார். வாக்குகளை அதிகம் பெறுவதற்காக உறவினர்கள் இடையேயான வார்த்தைப் போரால் தேர்தல் களத்தின் பிரசாரம் உச்சமடைந்துள்ளது.

மரபுரிமை போர்
பார்லி, மராத்வாடா

வரவிருக்கும் தேர்தலில் பார்லியில் கடுமையான போட்டிகளில் ஒன்றாக இருக்கும். அங்கே உறவினர்களான பாஜகவின் மூத்த அமைச்சர் பங்கஜ முண்டே மற்றும் சட்டபேரவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்ஜெய் முண்டே களத்தில் உள்ளனர். இருவருக்கும் இடையிலான போட்டி வெறும் சட்டமன்ற இறுக்கைக்காக அல்ல. இவர்கள் பாஜகவின் மறைந்த மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் அரசியல் மரபுக்கு உரிமை கோருகின்றனர். 2009 வரை தனஞ்ஜெய் முண்டேவின் தொகுதிப் பணிகளை மேற்பார்வையிட்டார். ஆனால், மூத்த தலைவர் முண்டே நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு பதிலாக சட்டமன்றத்துக்கு அவருடைய மகளை நியமித்ததால் இருவருக்கும் இடையே வேறுபாடுகள் வளர்ந்தன. இது தனஞ்ஜெய் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 2012 -இல் தனது மாமாவின் வலிமைக்கு எதிராக சாவல் விடுத்தார். முண்டேவின் துன்பகரமான மறைவுக்குப் பிறகு நடந்த 2014 தேர்தலில் பங்கஜா தனது உறவினரை 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஆனால், தஞ்ஞ்ஜெய் பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் முக்கியமான வெற்றிகளைப் பெற்றார்.

மாமா – சகோதரர் மகன், மருமகன் போட்டி
கெவ்ராய், மராத்வாடா

பண்டிட் குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் பல தசாப்தங்களாக பீட்ஸின் கெவ்ராயில் அரசியலைக் கட்டுப்படுத்திவருகின்றன. முன்னாள் அமைச்சர் சிவாஜிராவ் பண்டிட் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக இப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்; இவரைத் தொடர்ந்து, அவரது உறவினர் பாதாம்ராவ் சட்டசபைக்கு மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்படார். அதே நேரத்தில் பாதாம்ராம்ராவின் மருமகன் அமர்சின்ஹ், இந்த பிராந்தியத்தில் பாதாம்ராவின் கடுமையான எதிரியாகக் காணப்படுகிறார். இவர் தேசியவாத காங்கிரஸின் எம்.எல்.சி(சட்டமன்றக் குழு உறுப்பினர்) ஆவார். ஆனால், 2014-இல் முன்னாள் அமைச்சர் மதுகர் பவாரின் மகன் பாஜகவின் லக்ஷ்மன் பவார் சிவ சேனாவுக்கு சென்ற பாதாம் ராவைத் தோற்கடித்தார். தற்செயலாக, பவாரின் மகள் பண்டிட் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த முறை, பாஜக பவாரை மீண்டும் வேட்பாளராக நியமித்துள்ளது. அதே நேரத்தில் அமர்சின்ஹ் சகோதரர் விஜய்சின்ஹ் தேசியவாத காங்கிரஸ் கடிசியின் வேட்பாளராகவும், பதாம்ராவ் கிளர்ச்சி வேட்பாளராகவும் களத்தில் இறங்கியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close