Manoj C G
Maharashtra elections congress ncp meet likely today : காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளனர். சிவசேனாவுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தங்களின் ஆதரவை அளித்த நிலையில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனாவுக்கு நேர் எதிரான கருத்துகளை கொண்ட காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைக்க முதல்படியை எடுத்து வைத்துள்ளது. ஆனால் அவசரப்படுத்தவில்லை.
To read this article in English
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, அகமது படேல், ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரை சந்தித்த ஒரே நாளில் சிவசேனாவுடன் அதிகாரப்பகிர்வு என்னவாக இருக்கும் என்ற ஆலோசனையில் ஈடுபடத்துவங்கினர். சிவசேனாவின் ஹார்ட்லைன் இந்துத்துவா குறித்த விவாதங்களும் இடம் பெற்றது.
சிவசேனாவுடனான கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட டெல்லி விரைந்துள்ளார் மகாராஷ்ட்ரா காங்கிரஸ் கட்சி தலைவர். மகாராஷ்ட்ரா தலைவர்கள் டெல்லி தலைவர்களுடனும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என இரண்டும் இது வரை சிவசேனாவுக்கு 5 ஆண்டுகள் வரை முதல்வர் பதவி தருவது குறித்து எந்த ஒரு முடிவையும் எட்டவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், முடிவுகள் அனைத்தும் மிகவும் கவனத்துடன் எடுக்கப்படுவதாக கூறினார். மேலும் அந்தோணிக்கு காங்கிரஸ் கட்சி சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதில் பெரிய ஈடுபாடில்லை என்றும் கூறினார். பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்பது தான் மகாராஷ்ட்ராவில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முக்கிய காரணம். அந்தோணியும் வேணுகோபாலும் எதார்த்த அரசியல் குறித்து பேசி வருகின்றனர். எந்த முடிவாக இருந்தாலும் அது மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட்டனர். சிவசேனா கூட்டணியுடன் இணைவதற்கு முன்பு பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கார்கே, வேணு கோபால் மற்றும் படேல் ஆகியோர் என்.சி.பி கட்சியின் சுனில் தட்கரே, அஜித்பவார், ஜெயந்த் பாட்டில் ஆகியோருடன் இன்று பேச உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.