Maharashtra government asks help from Kerala to contain coronavirus in Mumbai : கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநில அரசு கேரள மாநில அரசிடம் உதவிகளை கேட்டுள்ளது. கேரள அரசிடம் 50 கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளித்த நிபுணர்கள் மற்றும் 100 செவிலியர்களை கேட்டுள்ளது.
Advertisment
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள கொரோனா வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை பணியாளர்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளது. இதனால் இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மகாராஷ்ட்ரா அரசு இந்த உதவியை கோரியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
கேரளாவில் இருந்து மகாராஷ்ட்ரா செல்ல இருக்கும் கொரோனா சிகிச்சை நிபுணர்களுக்கும் ரூ. 2 லட்சமும், மருத்துவர்களுக்கு ரூ. 80 ஆயிரமும், செவிலியர்களுக்கு ரூ. 30 ஆயிரமும் மாத சம்பளமாக வழங்கப்படும் என்று மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது. மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான தங்கும் இடம், உணவு மற்றும் இதர வசதிகளை மகாராஷ்டிரா மாநில அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளது.