Maharashtra Government Decided to change the names of residential areas : சாதி அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புப் பகுதிகள், இடங்கள், சாலைகள் பெயர்களை மாற்ற மகாராஷ்ட்ர அரசு முடிவு செய்துள்ளது. சாதி மத அடிப்படையில் பேதம் காட்டக் கூடாது என்பதை மனதில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
புதன்கிழமை நடந்த மகாராஷ்ட்ர மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் படி பட்டியல் இனத்தோர் வசிக்கும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சாதிய பெயர்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக சமூகத்தை சீர் திருத்த உதவியவர்கள், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பெயர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வைக்கப்படும் என்று கூறியுள்ளது அம்மாநிலம்.
மகாராஷ்ட்ர மாநில அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின். சாதிய பாகுபாடுகளை அகற்றி சமூக நீதி அடிப்படையில் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலம். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மாற்றங்களை விதைத்தனர். ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அம்பேத்கார் போன்ற மாபெரும் சமுதாய சீர்திருத்த சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு. அவர்களின் சிந்தனைகளுக்கு காலத்திற்கேற்ற செயல்வடிவம் தருகிறது சிவசேனா காங்கிரஸ் அரசு என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil