இந்திய பாரம்பரியத்தில் பசுக்களின் கலாச்சார முக்கியத்துவத்தை காரணம் காட்டி மகாராஷ்டிர மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதிகாரபூர்வ உத்தரவில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கம் என்றும், பழங்காலத்திலிருந்தே ஆன்மீகம், அறிவியல் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கூறியது.
இந்தியா முழுவதும் காணப்படும் பல்வேறு வகையான மாடுகளை எடுத்துரைத்து, மகாராஷ்டிரா அரசு நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவது குறித்து கவலை தெரிவித்தது. விவசாயத்தில் பசுவின் சாணத்தைப் பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் மனிதன் பிரதான உணவில் ஊட்டச்சத்து பெறுகிறான். பசு மற்றும் அதன் தயாரிப்புகள் தொடர்பான சமூக-பொருளாதார காரணிகளுடன் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, நாட்டு மாடுகளை வளர்க்க கால்நடை வளர்ப்பவர்களை அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.
இந்தியாவில் பசுவுக்கு தாய் அந்தஸ்து வழங்கப்பட்டு இந்து மதத்தில் வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தவிர, அதன் பால், கோமியம், சாணம் ஆகியவை புனிதமாகக் கருதப்பட்டு, மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. பசுவின் பால் மனித உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“