Maharashtra government formation LIVE updates : மகாராஷ்ட்ராவில் கடந்த 24ம் தேதி சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றது. சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலை சந்தித்தனர். ஆனால் சிவசேனா சரிசமமான அதிகாரப்பகிர்வு வேண்டும் என்றும் 2.5 ஆண்டுகள் தங்கள் கட்சியில் ஒருவர் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர். இதற்கு பாஜக மறுப்பு தெரிவிக்கவும், பாஜக அமைச்சரவையில் இருந்த ஒரே ஒரு சிவசேனா எம்.பியான சஞ்சய் ராவத் பதவி விலகினார்.
#WATCH Mumbai: NCP’s Ajit Pawar takes oath as Deputy CM, oath administered by Maharashtra Governor Bhagat Singh Koshyari at Raj Bhawan. pic.twitter.com/TThGy9Guyr
— ANI (@ANI) November 23, 2019
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. ஆளுநரிடம் 48 மணி நேரம் அவகாசம் கேட்க அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மூன்று கட்சிகளும் அதிகாரப்பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்றிரவு சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று அனைத்து கட்சிகளும் தங்களின் ஆதரவை தந்தனர். ஆனாலும் இன்று காலை தன்னுடைய ஆதரவை தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு அளித்தது. இன்று காலையில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்றார். இது யாரும் எதிர்பார்க்காத அரசியல் திருப்பு முனையாக அமைந்துவிட்டது.
இன்று காலையில் யாரும் எதிர்பார்க்காத திருப்பு முனையாக அமைந்துவிட்டது மகாராஷ்ட்ரா அரசியல் நிலை. தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த புதிய கூட்டணியின் கீழ் அமைந்த மகாராஷ்ட்ரா அரசுக்கும், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு தன்னுடைய வாழ்த்துகளை அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
Web Title:Maharashtra government formation live updates devendra fadnavis takes oath as cm
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங். உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை நாளை காலை 11.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு. நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என 3 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய தலைவராக திலிப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான புதிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
மாநில அரசின் உயரிய பதவியில் இருக்கும் கவர்னர், கட்சிகளிடையே பாகுபாடு பார்க்கிறார். நவம்பர் 22 மற்றும் 23ம் தேதி நடவடிக்கைகளின் மூலமே, கவர்னர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும் என்று சிவசேனா தனது மனுவில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிாராவில் சிறந்த நல்லாட்சி அமையவேண்டி எவ்வித அசாத்தியமான காரியங்களை, பிரதமர் நரேந்திர மோடி எங்களை வைத்து சாத்தியமாக்கி வருவதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலின் மக்கள் அளித்த தீர்ப்புக்கு ஏற்ப இந்த அரசு பதவியேற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத கட்சியின் அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், அஜித் பவார், பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்பது அவரது தனிப்பட்ட முடிவு என்றும், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். இதனிடையே, அஜித் பவாருக்கு ஆதரவு அளித்துள்ள 9 எம்எல்ஏக்கள், மும்பையிலிருந்து டில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். டில்லிக்கு சென்றுள்ள அந்த எம்எல்ஏக்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டுள்ள நிகழ்வு, பாரதிய ஜனதா அரசின் மோசமான அரசியல் நடவடிக்கை என்று இடதுசாரிகள் கட்சி விமர்சனம் செய்துள்ளது. ஆட்சி அதிகாரத்தை பறித்துகொள்வதற்காக, பாரதிய ஜனதா ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு அளித்துள்ள தீர்ப்பை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும். தேர்தலில், பா.ஜ.,க்கு ஆதரவாக தான் மக்கள் வாக்கு அளித்துள்ளனர். முன்பு ஒப்புக்கொண்ட விவகாரங்களில், பின்னர் சிவசேனா கட்சி முரண்டு பிடித்ததை மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் என்பது மக்களின் தீர்ப்பு என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அகமது படேல் “சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாஜகவை நாங்கள் சந்திப்போம். அனைவரும் இணைந்து பாஜகவுக்கு எதிராக வியூகம் வகிப்போம் என்றும், ஆட்சி அமைப்பதற்கு உண்டான எந்த நடவடிக்கையும் பின்பற்றப்படவில்லை” என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
தொடர்ந்து சரத்பவார் நிருபர்களிடம் கூறுகையில், ‘கவர்னர் மாளிகைக்கு சென்ற 10-11 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் இப்போது என்னுடன் இருக்கிறார்கள். 1980-களில் இதேபோன்ற சூழலை எதிர் கொண்டிருக்கிறேன். அப்படிச் செய்தவர்கள் யாரும் அடுத்த தேர்தலில் ஜெயிக்கவில்லை.
அரசு அமைக்கத் தேவையான எண்ணிக்கை எங்களிடம் இருக்கிறது. என்ன நடந்தது என தெரியவில்லை. நேற்று இரவு வரை எங்களுடன் இருந்தனர். சக நண்பர்களிடம் இருந்து இப்படியொரு செயல்பாட்டை எதிர்பார்க்கவில்லை’ என குறிப்பிட்டார் சரத்பவார்.
சரத் பவார், உத்தவ் தாக்கரே இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், ‘அஜீத் பவாருக்கு ஆதரவாக 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும். குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது காலையில்தான் எங்களுக்கு தெரியும்’ என்றார்.
உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார்.
வருகையை உறுதி செய்ய வாங்கப்பட்ட கையெழுத்து கடிதத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர். அதனை கொடுத்து தான் ஆதரவு அளிப்பதாக கூறியிருக்கிறார் அஜித் பவார் என்று நவாப் மாலிக் கூறியுள்ளார்.
மகாராஷ்ட்ராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு இவ்விருவரும் உழைத்திட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட்
தெற்கு மும்பையில் அமைந்திருக்கும் சரத் பவாரின் சில்வர் ஓக் இல்லத்திற்கு முக்கியத் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். தற்போது அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாம் மாலிக் சரத் பவார் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் தற்போது அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்களின் வழிநடத்தல் மற்றும் தலைமையின் கீழ் மீண்டும் பணியாற்றி புது உயரங்களை அடைவேன் என்று ட்வீட் செய்துள்ளார் தேவேந்திர ஃபட்னாவிஸ்
என்.சி.பியின் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இருவரும் கூட்டாக 12:30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
மகாராஷ்ட்ரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். பாஜக - சிவசேனா கூட்டணியினர் 161 எம்.எல்.ஏக்களை கொண்டிருந்தனர். ஆனால் சஞ்சய் ராவத் அனைத்தையும் மாற்றிவிட்டார். இப்போதேனும் அவர் கொஞ்சம் அமைதியாக இருக்கலாம். சிவசேனாவை அழித்ததே அவர் தான். நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிவசேனா கட்சியின் தலைவருமான சஞ்சய் ராவத் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே இப்போதும் தொடர்பில் இருக்கின்றனர். இன்றும் அவர்கள் இருவரும் சந்திப்பார்கள். இருவரும் இணைந்து செய்தியாளர்களையும் சந்திப்பார்கள். அஜித் பவார் மற்றும் அவருக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்கள் சத்திரபதி சிவாஜியையும், மகாராஷ்ட்ராவையும் அவமானப்படுத்திவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இழுபறி தொடர்ந்து ஏற்பட்டதால் குடியரசுத் தலைவர் ஆட்சி நவம்பர் 12ம் தேதி கொண்டு வரப்பட்டது. தற்போது புதிய ஆட்சி அமைக்கப்பட்டவுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்பட்டதாக ராம் நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இன்றைய மகாராஷ்ட்ரா ஆட்சியமைப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. அதற்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருடைய செயல்களுக்கு இக்கட்சி எந்த விதமான ஆதரவையும் தரவில்லை என்றும் ட்வீட்டில் அறிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மகாராஷ்ட்ரா அரசுக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார். மகாராஷ்ட்ராவின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக இவர்கள் செயல்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அறிவித்திருக்கிறார்.
மகாராஷ்ட்ரா முதல்வர் மற்றும் துணை முதல்வராக முறையே தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் !
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவாருக்கு சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியில் விருப்பம் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உத்தவ் தாக்கரேவே ஐந்து வருடங்களுக்கும் முதல்வராக இருக்க விரும்புவதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர்.
புதிய அரசை அமைத்திருக்கும் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார் பிரதமர் மோடி. மேலும் இவ்விருவரும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் எதிர்காலத்திற்காக உழைப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் அறிவித்தார்.
என்னுடைய நன்றியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருக்கு கூறிக் கொள்கிறேன். மகராஷ்ட்ராவில் நிலையான ஆட்சி அமைக்க அவர் தன்னுடைய ஆதரவை அளித்தார். அவரும் சில முக்கிய தலைவர்களும் ஒன்றாக வரவும் நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினோம் என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார்.