மகாராஷ்டிரா ஆளுநர் கடிதம் தாக்கல்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பித்தது

உச்சநீதிமன்றம் நேற்று பெருன்பான்மையை உடனடியாக நிரூபிக்க உத்தரவிடவில்லை என்றாலும், பாஜக ஆபரேஷன் லோட்டஸ் யூகத்தை நேற்று இரவு முதல் செயல்படுத்திவருவதாக பாஜக உள்வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன

Tamil Nadu News Today
Tamil Nadu News Today

288 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில், 105 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு பெரிய கட்சியாக விளங்கும் பாஜகவிற்கு, மேலும் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. உச்சநீதிமன்றம் நேற்று பெருன்பான்மையை உடனடியாக நிரூபிக்க உத்தரவிடவில்லை என்றாலும், பாஜக ஆபரேஷன் லோட்டஸ் யூகத்தை நேற்று இரவு முதல் செயல்படுத்திவருவதாக பாஜக உள்வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. இதன்மூலம் சட்டசபையில், பெருன்பான்மையை   நிருப்பீக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் தெரவித்தனர்.

நேற்று , உச்சநீதிமன்றம் மகாராஷ்டிராவில் என்.சி.பி தலைவர்களின் ஆதரவுடன் பாஜக அரசு அமைத்தது  தொடர்பான வழக்கில், ஆளுநர் பகத் சிங் கோஷியாரி எழுதிய கடிதங்களை சமர்ப்பிக்க மாநில ஆலோசகருக்கு இன்று காலை 10.30 மணி வரை கால அவகாசம் அளித்திருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி தேவேந்திர ஃபட்னாவிஸை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுத்த கடிதத்தையும் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனக்கு பெரும்பான்மை இருப்பதைக் காட்டி ஆளுநரிடம் சமர்ப்பித்த கடிதத்தையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்றதை எதிர்த்தும் மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷியாரிக்கு எதிராகவும் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் இணைந்து தாக்கல் செய்த மனுவை மேல் உச்ச நீதிமன்றம் நீதிமன்றம் நேற்று விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, உரிய உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன்பு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கடிதங்களை இன்று பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆளுநரின் தகவல்தொடர்பு பதிவுகளை சமர்ப்பிக்க துஷார் மேத்தா இரண்டு நாட்கள் அவகாசம் கோரியதை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் தேவேந்திர ஃபட்னாவிஸ்ஸுக்கும் அஜித் பவாருக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் உத்தவ் தாக்கரே முதல்வராகத் தேர்ந்தெடுத்து அரசு அமைக்கத் தயாரான நிலையில், சனிக்கிழமை பாஜக என்.சி.பி தலைவர் சரத் பவார் மருமகன் அஜித் பவாரின் ஆதரவுடன் அவருக்கு துணை முதல்வர் பதவி அளித்து அரசு அமைத்தது. மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் அரசு அமைப்பதற்காண திரைமறைவு வேலைகளை பாஜக செய்தது. ஆனால், மகாராஷ்டிராவில் அரசமைக்க பாஜகவை அழைத்த ஆளுநரின் முடிவை சிவசேனா – என்.சி.பி – காங்கிரஸ் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்துசெய்து ஃபட்னவிஸை முதலமைச்சராக்க ஆளுநர் முடிவு செய்தது வினோதமானது என்றும் இது ஜனநாயகப் படுகொலை என்று சிங்வி கூறினார்.

மேலும், “தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருந்தால், அதை சட்டமன்றத்தில் நிரூபிக்கட்டும். இல்லாவிட்டால், மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை எங்களிடம் உள்ளன” என்று சிபல் சிங்வி கூறினார்.

பாஜக சாரிபில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கூட்டு மனு தாக்கல் குறித்து கேள்வி எழுப்பிய அவர், மனு தாக்கல் செய்தவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்றார். இதற்கு, நீதிபதி என்.வி.ரமணா “இந்த நீதிமன்றத்தில் வானமே எல்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானலும் கேட்கலாம். எந்த நபரும் தன்னை பிரதமராக்க கேட்கலாம்.” என்று கூறினார்.

அரசியல் கட்சியை அரசு அமைக்க அழைத்த ஆளுநரின் முடிவு நீதித்துறை மறுஆய்வுக்கு ஏற்றதல்ல. ஏனெனில், அது அவருடைய விருப்பப்படி உள்ளது என்று வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறினார். “ஆளுநர் நேற்று என்ன செய்தார் என்பது எந்தவொரு நீதித்துறை மறுஆய்வுகளிலிருந்தும் விலகியது. அவர் கட்சியைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவரிடம் உள்ளது” என்று ரோஹத்கி கூறினார்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புதான் இறுதியானது என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க 2-3 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆளுநரின் உத்தரவுகள் கூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும் கூட்டு மனு தாக்கல் செய்தவர்களின் மனுவில் எந்த ஆவணங்களும் இணைப்புகளும் இல்லாமல் இருப்பதாகவும்” ரோஹத்கி சமர்ப்பித்தார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Maharashtra government formation order governor bhagat singh koshyari letter to devendra fadnavis supreme court

Next Story
சரத் பவார் நிழலில் இருந்து விலகியதன் மூலம் கவனத்தை ஈர்க்கிறார் அஜித் பவார்Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express