Maharashtra Government Formation Uddhav Thackeray sits with Congress : மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது இன்னும் இழுபறியான முடிவற்ற ஒரு கேள்வியாகவே இருக்கிறது. ஜனாதிபடி ஆட்சி அமலுக்கு வந்த பின்பு புதன்கிழமை சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
இந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தங்களின் கூட்டு அறிக்கையை வெளியிட்டு சிவசேனா கட்சிக்கு தங்களின் ஆதரவை உறுதிபடுத்தியது. மேலும் அதில் மூன்று கட்சிகளுக்குமான விதிமுறைகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் புதன்கிழமை என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு சிவசேனாவை மேலும் பதட்டமடைய வைத்துள்ளது.
புதன்கிழமை மதியம் மகாராஷ்ட்ரா மூத்த காங்கிரஸ் தலைவர்களான பாலாசாகிப் தோரட், முன்னாள் முதல்வர் அசோக் சாவன், மற்றும் மணிக்ராவ் தாக்ரே ஆகியோர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்.சி.பி கட்சியினர் பங்கேற்கவில்லை. மகராஷ்ட்ரா தேர்தல் முடிவுற்ற பின்பு உத்தவ் தாக்கரேயின் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும்.
நவம்பர் 11ம் தேதி தாக்கரே சோனியா காந்திக்கு போன் செய்து, காங்கிரஸ் கட்சி, சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர் அழுத்தங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சியினர் தங்களின் ஆதரவு கடிதங்களை அளிப்பதற்கு எவ்வளவு நாளாகும் என்று கேட்டுக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி தங்களின் முடிவினை அறிவிப்பதற்கு காலம் எடுத்துக்கொள்ளும் என்பதையும் சிவசேனா நன்கே உணர்ந்திருக்கிறது. இந்த கட்சிகளின் நிலைப்பாடு சில விசயங்களில் நேர் எதிர் கோணங்களில் அமைந்திருக்கிறது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு 5% இட ஒதுக்கீடு விவகாரத்தில்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஆனால் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இவ்விரண்டு கட்சிகளின் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் நிர்வாக பங்கீடு குறித்து பேசியதாக கூறுகிறது. காங்கிரஸ் கட்சி இதர இரண்டு கட்சிகளைக் காட்டிலும் சில இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. மேலும் மூன்று கட்சிகளுக்கும் சமமான நிர்வாக பொறுப்புகள் ஒதுக்குவது குறித்தும் பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு பாஜகவுக்கு முழு ஆதரவையும் அளித்தது என்.சி.பி.. அதனால் என்.சி.பி கட்சியை சேர்ந்தவருக்கு சபாநாயகர் பொறுப்பு அளிக்கப்படுவதை சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்கரே இது குறித்து கூறும் போது, மூன்று கட்சிகளும் சிறப்பாக இந்த ஆட்சி அமைப்பது குறித்து பேசி வருகிறது., அனைத்தும் சிறப்பான முறையில் சென்று கொண்டுள்ளது. சரியான நேரத்தில் நாங்கள் எங்களின் முடிவுகளை அறிவிப்போம் என்று அவர் அறிவித்தார். மணிக்கராவ் தோரட் கூறுகையில் “இந்த ஆலோசனை கூட்டம் நேர்மறையான முடிவுகளை நோக்கி நகர்கிறது” என்று குறிப்பிட்டார்.
சரத் பவார் தன்னுடைய கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அழைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியால், ஆட்சி அமைக்க மாட்டோம் என்று யாரும் எண்ண வேண்டாம் என்று அறிவித்திருந்தார். மேலும் கூடிய விரையில் புதிய ஆட்சி அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
என்.சி.பி. நேற்று சிவசேனாவுடன் நடத்த இருந்த சி.எம்.பி. ஆலோசனை கூட்டத்தை இறுதி நிமிடத்தில் ரத்து செய்து அறிவித்தார் அஜித் பவார். இந்த கூட்டம் மறுபடியும் எப்போது நடைபெறும் என்று அவர் தேதி ஏதும் குறிப்பிடாமல் பாராமதி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை இரவு (13/11/2019) 07:30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது என கூறுகிறார் தோரட். அஜித் பவாரின் இந்த செயல் குறித்து சரத் பவார் கூறுகையில் “அவர் எங்கும் செல்லவில்லை. மும்பையில் தான் இருக்கிறார். காங்கிரஸ் - என்.சி.பி. கூட்டத்தில் அவர் நிச்சயம் பங்கேற்பார்” என்று அறிவித்துள்ளார். ஆனாலும் காங்கிரஸ் கட்சி தனியாக சிவசேனாவை சந்தித்து பேசியதில் அதிருப்தி அடைந்துள்ளது என்.சி.பி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.