மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷியாரி விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துள்ள பாஜக, பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில்நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆனால், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. முதல்வர் பதவி தான் வேண்டும் என்று சிவசேனா பிடிவாதம் பிடிக்க, அந்த பேச்சுக்கே வாய்ப்பில்லை என்று பாஜக திட்டவட்டமாக கூறிவிட்டது.
5 ஆண்டு பதவிக்காலம் முடிந்து விட்டதால் நேற்று முன்தினம் ஆளுநரை சந்தித்து பட்னாவிஸ் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆளுநர், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காபந்து முதல்வராக பதவியில் நீடிக்கும்படி பட்னாவிஸிடம் கேட்டுக் கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.
ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று காலை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்கந்திவார், பங்கஜ் முண்டே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஆலோசித்தனர். ஆனால், எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த ஆலோசனையில் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லை என்பதால், ஆளுநர் அழைப்பை நிராகரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு அந்தத் தகவலை ஆளுநரிடம் பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
10, 2019Watch | Fadnavis vs Thackeray: BJP-Shiv Sena tussle intensifies over sharing #Maharashtra's CM post pic.twitter.com/aQTb1vw30d
— The Indian Express (@IndianExpress)
Watch | Fadnavis vs Thackeray: BJP-Shiv Sena tussle intensifies over sharing #Maharashtra's CM post pic.twitter.com/aQTb1vw30d
— The Indian Express (@IndianExpress) November 10, 2019
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், " உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி முதல்வர் பதவி கேட்டுப் பிடிவாதம் செய்கிறது. இது சிவசேனா, பாஜக சேர்ந்து அமைந்த கூட்டணிக்கு மக்கள் அளித்த வாக்குகளுக்கு அவமதிப்பு செய்வதாகும்.
மகாராஷ்டிரா மக்கள் பாஜக-சிவசேனா கூட்டணிக்குத்தான் வாக்களித்துள்ளார்கள். ஆனால், சிவசேனா கட்சி மக்களின் தீர்ப்பை உதாசினப்படுத்திவிட்டது. ஆதலால், நாங்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். இதுதொடர்பான எங்கள் முடிவை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் தெரிவித்துள்ளோம்.
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க சிவசேனா விரும்பினால், அவர்களுக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சிவசேனாவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.