மகாராஷ்டிராவின் முதலமைச்சராக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் தானாக முன்வந்து ராஜினாமா செய்ததால், அவரை மீண்டும் முதலமைச்சராக நியமிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (மே 11) கூறியது.
இருப்பினும், உத்தவ்-தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) அரசாங்கத்தைக் கவிழ்த்த நம்பிக்கைத் தேர்வு சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், நபம் ரெபியா வழக்கில் 2016 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை ஒரு பெரிய பெஞ்சிற்கு பரிந்துரைத்தது.
அதன்படி, சபாநாயகர் பதவி நீக்கம் தொடர்பான நோட்டீஸ் நிலுவையில் உள்ள நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்கம் மனு மீது அவைத் தலைவர் முடிவு செய்ய முடியாது.
முதல்வர் ஷிண்டேவின் சேனாவைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இவர்களுக்கு அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரே கூட்டிய கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காததற்காக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஷிண்டே மாநில சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணி மொத்தமுள்ள 288 எம்எல்ஏக்களில் 164 பேரின் ஆதரவைப் பெற்றது.
இந்த மனுக்கள் 2022 ஜூன் முதல் தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிவசேனாவின் இரு தரப்பினரும் தாக்கல் செய்த இந்த மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கில், மார்ச் 16ஆம் தேதி விசாரணையை முடித்து, சிவ சேனா இரு தரப்பினரும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“