மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் இன்று (நவம்பர் 20) மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் முழுவதும் இன்று வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Video journalist moonlighting as Rapido rider killed in BMW crash in Chennai
மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியும், எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடியும் (எம்.வி.ஏ) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. ஜார்க்கண்டில், ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கும் ஆளும் ஜே.எம்.எம் தலைமையிலான இந்தியா கூட்டணி கவனம் செலுத்தப்படுகிறது. மாநிலத்தில் சோரன் அரசை அகற்ற பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.
‘எக்ஸிட் போல்’ என்கிற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பது வாக்காளர்கள் வாக்களித்த உடனேயே நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் ஆகும். வாக்காளர்கள் எப்படி வாக்களித்தனர் என்பதைக் கணக்கிட்டு, வாக்களிக்கும் முறைகளையும் கவனித்து இந்த கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளின் மதிப்பீடுகளை வழங்குகின்றன. ஆனால், அவை அதிகாரப்பூர்வ முடிவுகள் அல்ல.
மகாராஷ்டிராவில், பா.ஜ.க, ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவாரின் என்.சி.பி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் மகாயுதி மற்றும் காங்கிரஸ், சிவசேனா (யு.பி.டி) உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியான மஹா விகாஸ் அகாடி (எம்விஏ) ஆகியவற்றுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கு 145 இடங்கள் தேவை. இந்த நிலையில், பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. இருமாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
P-MARQ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 137 முதல் 157 வரையிலான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி பின்வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கருத்துக்கணிப்புகள்படி, மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி 126 முதல் 146 இடங்களைப் பெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள், 2 முதல் 8 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதே பொல, பீப்பிள் பள்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 175 முதல் 195 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி 85 முதல் 112 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள், 7 முதல் 12 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
மாட்ரிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 150 முதல் 170 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி 110 முதல் 130 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள், 8 முதல் 10 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
லோக்ஷாஹி மராத்தி ருத்ரா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 128 முதல் 142 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி 125 முதல் 140 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள், 18 முதல் 23 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
சி.என்.என் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு படி, மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி 154 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி 128 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள் 6 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கு 41 இடங்கள் தேவை. இந்த நிலையில், பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன.
சி.என்.என் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.க 45 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 33 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள் 3 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
மாட்ரிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளின் படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.க 42 முதல் 47 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 30 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள் 1 - 4 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
பீப்பிள் பள்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளின்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.க 44 முதல் 53 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 37 இடங்ளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இதர கட்சிகள் 5 - 9 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.