Advertisment

'வெங்காய விலை ஏறினால், அதை சாப்பிடாதீங்க': மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை கருத்து

வெங்காய விலை குறித்து மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சர் தாதா பூஸ் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Maharashtra minister Dada Bhuse on Onion price hike Tamil News

'வெங்காயம் வாங்க முடியாதவர்கள், இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகாது.' என்று மகாராஷ்டிரா அமைச்சர் தாதா பூஸ் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

Maharashtra minister Dada Bhuse Tamil News: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும், உள்ளூர் சந்தைகளில் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான லாசல்கான் சந்தை உட்பட நாசிக் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டிகளிலும் வெங்காய ஏலத்தை காலவரையின்றி நிறுத்த வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், வெங்காய விலை குறித்து மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சர் தாதா பூஸ் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனத்தைப் பயன்படுத்தும்போது, சில்லறை விலையை விட 10 அல்லது 20 ரூபாய் அதிக விலையில் பொருட்களை அவர்களால் வாங்கமுடியும். வெங்காயம் வாங்க முடியாதவர்கள், இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகாது.

சில சமயங்களில் வெங்காயம் குவிண்டாலுக்கு 200 ரூபாயாக இருக்கும். சில சமயங்களில் 2,000 ரூபாயாகவும் அதிகரிக்கும். இதுபோன்ற நிலைமையில் ஆலோசனை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். வெங்காய ஏற்றுமதி வரி விதிக்கும் முடிவு சரியான ஒருங்கிணைப்புடன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்." என்று கூறினார்.

அமைச்சர் தாதா பூசின் இந்த சர்ச்சை கருத்து மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. அவரது இந்த கருத்துக்கு நெட்டிசன்களும், பொதுமக்களும் அவரை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர். தாதா பூஸ் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Maharashtra Onion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment