Advertisment

பஞ்சாரா சமூக கூடம் அமைப்பு: அமைச்சரின் அறக்கட்டளைக்கு அரசு நிலம் ஒதுக்கீடு

மாநில அரசு ஒரு வருடத்திற்குப் பிறகு ஸ்ரீ சந்த் டாக்டர் ராம்ராவ் மகாராஜ் அறக்கட்டளைக்கு 5,600 சதுர மீட்டர் நிலத்தை ஒதுக்கியது. இந்த அறக்கட்டளையின் மகாராஷ்டிரா தலைவராக அமைச்சர் உள்ளார்.

author-image
WebDesk
New Update
Maha Min



மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவையில் உள்ள சிவசேனா அமைச்சர் ஒருவர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள பஞ்சாரா மக்களுக்கான சமூக மையத்திற்காக நகர திட்டமிடல் நிறுவனமான சிட்கோ மூலம் நவி மும்பையில் தனது சொந்த அறக்கட்டளைக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்ய நவம்பர் 2023-ல் மாநில அரசிடம் பெற்றார். 

Advertisment

பஞ்சாரா சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இந்திய பஞ்சாரா சேவா சங்கம் (AIBSS) என்ற அமைப்பால் நவம்பர் 2022 இல் சமுதாய மையத்திற்கான கோரிக்கை முதன்முதலில் முன்வைக்கப்பட்ட நிலையில், மாநில அரசு ஒரு வருடத்திற்குப் பிறகு ஸ்ரீ சந்த் டாக்டர் ராம்ராவ் மகாராஜ் அறக்கட்டளைக்கு 5,600 சதுர மீட்டர் நிலத்தை ஒதுக்கியது. இந்த 

 அறக்கட்டளையின் தலைவராக உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சர் சஞ்சய் ரத்தோட் உள்ளார். 

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆவணங்களை ஆய்வு செய்தது.   சிட்கோ நிறுவனம் மூன்று நிலப் பார்சல் விருப்பங்களைக் கண்டறிந்த பிறகு, பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த யவத்மாலின் சேனா எம்.எல்.ஏவும் அமைச்சருமான ரத்தோட், இவற்றை மதிப்பாய்வு செய்வதில் முன்னணி வகித்து, ஏ.ஐ.பி.எஸ்.எஸ்ஸுக்கு ஒரு நிலப் பார்சலை பட்டியலிட்டார்.

இந்த மையத்திற்கான நிலத்தை அடையாளம் காணும் பொறுப்பு சிட்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ரத்தோடைத் தொடர்பு கொண்டபோது, ​​நிலத்தைத் திருப்பித் தரத் தயாராக இருப்பதாகவும், ஆர்வமுள்ள வேறு எந்த அமைப்பும் சமுதாயக் கூடத்தைக் கட்ட முன்வரலாம் என்றும் கூறினார். 

“நிலத்தைப் பெறுவதில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை, ஏனெனில் அது ஒரு சமூக நோக்கத்திற்காக இருந்தது மற்றும் இலாபம் ஈட்டுவதற்காக அல்ல. சமூக கூடத்தை அமைக்க ஆர்வமுள்ள பல நிறுவனங்களில் எங்களுடையதும் ஒன்று,” என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த செயல் "அதிகார துஷ்பிரயோகம்" மற்றும் "நெறிமுறையற்ற" நடத்தை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது,.  தனி செயலாளர் எழுதிய கடிதத்தில், பஞ்சாரா சமூகத்திற்கான மையத்திற்கான நிலம் இறுதி செய்யப்பட்டவுடன், "ஸ்ரீ சாந்த் டாக்டர் ராம்ராவ் மகராஜ் அறக்கட்டளை' என்ற பெயரில் சதி மாற்றப்பட வேண்டும்" என்று தனிச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதை அறிந்த சிட்கோ ஜூலை 28, 2023 அன்று நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளருக்கு கடிதம் எழுதியது, இந்தக் கடிதத்தின்படி, முதல்வர் ஷிண்டே அந்த ஆண்டு பிப்ரவரியில் முந்தைய கூட்டத்தில் ஒரு சமூக மையத்திற்கான AIBSS கோரிக்கையைப் பற்றி விவாதித்தார். 

மே 8, 2023 அன்று நடந்த மறுஆய்வுக் கூட்டத்தைப் பற்றியும் அது குறிப்பிடுகிறது, அப்போது அப்போதைய தலைமைச் செயலர் சிட்கோவிடம், முன்பு விவாதிக்கப்பட்ட நிலங்கள் வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டதால், அதற்கான முன்மொழிவை அனுப்புமாறு சிட்கோவிடம் கேட்டுக் கொண்டார்.



ஒரு நாள் கழித்து, மே 9, 2023 அன்று, அமைச்சர் சஞ்சய் ரத்தோட் சிட்கோ அலுவலகத்திற்குச் சென்று, ஏஜென்சியால் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களை ஆய்வு செய்து அவற்றில் இரண்டை இறுதி செய்தார். இதையடுத்து அந்த நிலத்தை அமைச்சரின் அறக்கட்டளையான ஸ்ரீ சந்த் டாக்டர் ராம்ராவ் மகராஜ் அறக்கட்டளைக்கு மாற்றுமாறு அவரது தனிச் செயலர் ஜூன் 16, 2023 அன்று சிட்கோவுக்கு கடிதம் எழுதினார்.

சிட்கோ நிறுவனத்திற்கு அமைச்சரின் லெட்டர்ஹெட்டில் தனிச் செயலாளர் எப்படி கடிதம் எழுத முடியும் என்று கேட்டதற்கு, நிலத்தை திருப்பித் தரத் தயாராக இருப்பதால் இந்தக் கேள்வி அர்த்தம் அற்றது என்று அமைச்சர் ரத்தோட் கூறினார்.

UDD க்கு Cidco கடிதம் அனுப்பிய ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, மாநில அமைச்சரவை செப்டம்பர் 16, 2023 அன்று மொத்தம் 5,600 சதுர மீட்டர் நிலத்தை சமுதாயக் கூடம் கட்டுவதற்காக ஒப்படைக்க முடிவு செய்தது. ஆனால், அமைச்சரவையின் முடிவில் பயனாளி யார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் நவம்பர் 1, 2023 அன்று, UDD ஒரு அரசாங்கத் தீர்மானத்தை வெளியிட்டது, அதன் பின் நிலம் ஸ்ரீ சந்த் டாக்டர் ராம்ராவ் மகாராஜ் அறக்கட்டளைக்கு ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த சிலர் இது "நெறிமுறையற்றது" என்றும் அமைச்சரின் "அதிகார துஷ்பிரயோகம்" என்றும் குற்றம் சாட்டி கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

பஞ்சாராக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு அமைப்பான அகில இந்திய கோர்பஞ்சாரா ஜாக்ரன் பரிஷத், மாநில லோக் ஆயுக்தாவிடம் புகார் அளித்துள்ளது. "முழு செயல்முறையும் அதிகார துஷ்பிரயோகம் தவிர வேறில்லை. அந்த நிலம் தனது தலைமையிலான அறக்கட்டளைக்கு செல்வதை அமைச்சர் உறுதி செய்துள்ளார், இது நெறிமுறையற்றது மட்டுமல்ல, சட்டவிரோதமானது.

ஆங்கிலத்தில் படிக்க:     Maharashtra Minister gets govt to allot Navi Mumbai land meant for OBCs to trust that he heads

இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும், எனவே ஆளுநர், முதல்வர் மற்றும் இரண்டு துணை முதல்வர்கள் உட்பட அனைவரையும் அணுகியுள்ளோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம் என்று பரிஷத் செயலாளர் விட்டல் தர்வே கூறினார்.

அமைச்சர் ரத்தோட், கூறுகையில், சமூக கூடம் கட்ட இன்னும் பணிகள் தொடங்கவில்லை என்றார். வழிகாட்டுதல்களின்படி ஆறு மாதங்களுக்குள் எங்களால் பணியைத் தொடங்க முடியாது. எனவே, வேறு எந்த அமைப்பும் முன்வந்து இந்த நிலத்தை பெற விரும்பினால், நாங்கள் வழங்குவோம்,'' என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment