Advertisment

திகைத்துப்போன ஃபட்னாவிஸ்; தெளிவுபடுத்திய பாஜக... கட்டுப்பாட்டில் ஷிண்டே

திட்டமிடல் மற்றும் ஒழுக்கத்திற்கு கடுமையான முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கட்சியில் இதுபோன்ற குழப்பத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியது தெரியவில்லை. ஆனால், அது தேவேந்திர ஃபட்னாவிஸ்க்குகூட தெரியவில்லை. ஷிண்டேவை பாஜக முழுவதுமாக வளைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

author-image
WebDesk
New Update
eknath shinde, maharashtra politics, devendra fadnavis, maharashtra crisis news, uddhav thackeray resignation, shiv sena, maharashtra bjp, mva govt, maharashtra news today, மகாராஷ்டிரா அரசியல் நிலைமை, சிவசேனா, பாஜக, தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, சிவ சேனா, ஜேபி நட்டா, அமித்ஷா

மகாராஷ்டிராவின் அரசியல் நிகழ்வுகள் - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தனியாக வைத்திருப்பது முதல் புதிய அரசாங்கம் வியாழக்கிழமை பதவியேற்பது வரை - பாஜக மத்திய தலைமை நெருக்கமாக வேலை செய்துள்ளது. அது முக்கிய தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு கூட தெரியவில்லை. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisment

இதனால் மும்பையில் வியாழக்கிழமை நடந்த அசாதாரண நிகழ்வுகளில், முதலில், ஷிண்டே முதலமைச்சராக இருப்பார். அவர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார் என்ற ஃபட்னாவிஸின் ஆச்சரியமான அறிவிப்பு இருந்தது. பின்னர், பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் அறிக்கையில், இல்லை, ஃபட்னாவிஸ் துணை முதல்வராக இருப்பார் என்று அமித்ஷாவால் உடனடியாக உறுதிப்படுத்தப்பட்டது.

திட்டமிடல் மற்றும் ஒழுக்கத்திற்கு கடுமையான முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியில் இதுபோன்ற குழப்பம் வெளிப்படையாக நடப்பது அறியப்படவில்லை. அது ஃபட்னாவிஸ்க்குகூட தெரியவில்லை. ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஃபட்னாவிஸ் ஒரு திறமையான நிர்வாகியாகக் கருதப்படுவதால், அவரை அரசாங்கத்துக்கு வெளியே வைத்திருப்பது தொண்டர்களுக்கு மனச்சோர்வை அளிக்கும் தவறான சமிக்ஞைகளை அனுப்பியிருப்பதாக கட்சி உணர்ந்தது.

ஏக்நாத் ஷிண்டே குறித்து கட்சி தெளிவாக இருந்தது. சிவ சேனா அதிருப்தி தலைவருக்கு தேவையான சிவ சேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை கிடைத்தால் அவர் முதல்வராக இருப்பார் என்று கூறப்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி நட்டா ஆகிய இருவருடனும் பேசுவதற்காக ஃபட்னாவிஸ் உண்மையில் இரண்டு முறை தேசிய தலைநகர் டெல்லிக்கு சென்றார். ஆனால், முழு விவரமும் கொடுக்கப்படவில்லை. உத்தவ் தாக்கரேவின் ராஜினாமா செய்தி வந்தவுடன் கட்சிக்காரர்கள், நலம் விரும்பிகளின் வாழ்த்துச் செய்திகளை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதில் இருந்தும் இது தெளிவாகிறது.

“மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா” என இந்த முடிவை முழுவதுமாக டெல்லி எடுத்ததாக மூத்த நிர்வாகி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ஒப்புக்கொண்டார். பின்னர், இருவரும் ஃபட்னாவிஸை அழைது பேசினர். மேலும், அவர்களின் அறிக்கைகளில் ஃபட்னாவிஸின் பங்களிப்பிற்காக பாராட்டுகள் நிறைந்திருந்தன.

2024 இல் லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் திட்டமிடப்பட்ட நிலையில், பாஜக தனது மெகா முக்கியத் திட்டங்களை விரைவாகக் கண்காணிப்பதற்கு மிகக் குறைந்த காலமே எஞ்சியிருப்பதாகப் பார்க்கிறது. மேலும், ஃபட்னாவிஸ், முன்னதாக முதலமைச்சராக இருந்ததால், அவற்றைத் செயல்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். மாறாக, ஏக்நாத் ஷிண்டே, தனது அரசியல் கேரியர் முழுவதையும் தாக்கரேக்களின் நிழலில் கழித்ததால், சிவ சேனாவை ஒன்றாக வைத்திருப்பதால், கையில் இருக்கும் பணியில் கவனம் செலுத்துவது கடினமாக இருந்திருக்கும்.

இது தவிர, சாதிக் கணக்கீடுகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாஜக தலைவர் கூறினார்: “நாங்கள் சமூக பொறியியல் காரணிகளை வைத்திருக்கிறோம். 3% பிராமணர்களைக் கொண்ட இந்த மாநிலத்தில், ஒரு பிராமணர் முதல்வராக இருந்தால், எதிர்க்கட்சியான காங்கிரஸ், என்.சி.பி மற்றும் உத்தவ் சேனா ஆகியவை பாஜகவை குறிவைக்க வசதியான ஆயுதமாக இருக்கும். ஏக்நாத் ஷிண்டே ஒரு மராத்தா, அவருடைய சமூக மக்கள் தொகை 30% உள்ளது. 2014 மற்றும் 2019 க்கு இடையில் ஃபட்னாவிஸ் முதலமைச்சராக இருந்தபோது, இரண்டு ஆண்டுகளாக இடஒதுக்கீடு கோரி ஆக்ரோஷமான மராத்தா போராட்டத்தை எதிர்கொண்டார்.

2014 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவிக்கு ஆச்சர்யமான தேர்வாக இருந்த பாஜக தலைவர், கட்சியில் மிக வேகமாக உயர்ந்த அவர் குறைவான சாதனைகள் வைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. மாநில, மத்திய தலைவர்கள் இருவரும் ஃபட்னாவிஸின் புகழைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கையை பெற்றதாகக் கருதப்பட்ட தலைவரின் அதிகாரத்தை குறைக்க தூண்டியிருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுவாக விரும்பப்பட்டாலும், ஃபட்னாவிஸ்க்கு நிறைய எதிர்ப்பாளர்கள் உள்ளனர். ஊழல் குற்றச்சாட்டால் 2020ல் பாஜகவில் இருந்து விலகி என்.சி.பி.யில் சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் காட்சே மீது குற்றம் சாட்டினார். வினோத் தாவ்டே மற்றும் சந்திரசேகர் பவான்குலே போன்ற பிற தலைவர்களும் 2019 சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு சீட் தர மறுக்கப்பட்டதில் ஃபட்னாவிஸின் செல்வாக்கு இருந்ததாக சந்தேகித்தனர். உண்மையில் பின்னர் அவர்களுக்கு பாஜகவில் இடமளிக்கப்பட்டது. மற்றொரு முக்கிய முகமான பங்கஜா முண்டே, தான் ஃபட்னாவிஸைத் தலைவராகக் கருதவில்லை என்றும், பார்லி சட்டமன்றத் தொகுதியில் தான் தோற்றதற்கு அவர்தான் காரணம் என்றும் பகிரங்கமாகக் கூறினார்.

டெல்லியில் உள்ள கட்சி வட்டாரங்கள் கூறுகையில், மாநிலத்தில் பாஜகவின் அவரது பொறுப்பை பாராட்டினாலும், மத்திய தலைமையும் அவரது செயல்பாட்டு பாணியில் ஒதுக்கீடுகளை உருவாக்கியுள்ளது.

சமீப காலமாக ஃபட்னாவிஸின் செல்வாக்கு மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. அவர் இந்துத்துவா பிரச்சினைகளில் எம்.வி.ஏ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து வந்தார். அதன் பல தலைவர்கள் வழக்குகளை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் சமீபத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து ராஜ்யசபா மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதன் எண்ணிக்கையை விட அதிக இடங்களைப் பெற உதவினார்.

மும்பையில் வியாழக்கிழமை மாலை பட்னாவிஸ் செய்தியாளர் கூட்டத்தில், ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார். அதே நேரத்தில் ஷிண்டே அடுத்த முதல்வர் என்று அறிவித்தபோதும், தேசிய தலைநகர் டெல்லியில், பாஜக தலைவர் துணை முதல்வராக இருப்பார் என்று ஜே.பி. நட்டா அறிவித்தார். “மகாராஷ்டிராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருப்பார் என்றும், அவர் ஆட்சியில் இருக்க மாட்டார் என்றும் ஃபட்னாவிஸ் இப்போது அறிவித்துள்ளார். இது நம்முடைய கட்சி மற்றும் நம்முடைய தலைவரின் குணாதிசயத்தை காட்டுகிறது. நாங்கள் அதிகாரத்திற்காக செயல்படுபவர்கள் அல்ல, நம்முடைய சித்தாந்தத்திற்காக பாடுபடுகிறோம்… இருப்பினும், பாஜகவின் மத்திய தலைமை, ஃபட்னாவிஸ் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. எனவே, அவரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்துள்ளேன்” என்று ஜே.பி. நட்டா கூறினார்.

சில நிமிடங்களிலேயே ஒரு ட்வீட்டில் இதை ஆமோதித்த அமித்ஷா கூறினார்: “… (ஃபட்னாவிஸ்) பரந்த மனதைக் காட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அரசாங்கத்தில் சேர முடிவு செய்துள்ளார். இந்த முடிவு மகாராஷ்டிரா மீதான அவரது உண்மையான விசுவாசம் மற்றும் சேவையின் அடையாளம். இதற்காக நான் அவரை மனதார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.

குறைந்தபட்சம் இரண்டு மூத்த தலைவர்களாவது தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இது ஒரு தற்காலிக ஏற்பாடாக இருக்கலாம் என்றும், எதிர்காலத்தில் ஃபட்னாவிஸ் தேசிய அரசியலுக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறினார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Maharashtra Devendra Fadnavis Shiv Sena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment