Advertisment

தேசிய அளவில் கவனம் ஈர்த்த மகாராஷ்டிரா துணை சபாநாயகர்: 3-வது மாடியில் இருந்து குதிக்க காரணம் என்ன?

மகாராஷ்டிரா துணை சபாநாயகர் மற்றும் பட்டியல் பழங்குடி எம்.எல்.ஏ-க்கள் தலைமைச் செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
Maharashtra Tribal MLAs jump onto safety net 3rd floor Dy Speaker Zirwal leads protest ST quota to Dhangars Tamil News

சில வாரங்களுக்கு முன்பு, தங்கர் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்த பிறகு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில அரசு மற்றவர்களைப் புண்படுத்தாமல் அவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் என்று கூறியிருந்தார்.

மகாராஷ்டிராவின் துணை சபாநாயகரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவருமான நர்ஹரி ஜிர்வால் தலைமையிலான பட்டியல் பழங்குடி எம்.எல்.ஏ-க்கள் இன்று வெள்ளிக்கிழமை, தங்கர் சமூகத்தினருக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து மந்த்ராலயா என அழைக்கப்படும் தலைமைச் செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Advertisment

அவர்கள் 3-வது மாடியில் இருந்து குதித்தபோது, அங்கு முன்னெச்சரிக்கையாக விரைந்து வந்த போலீசார் மாடிகளுக்கு இடையே வலையை விரித்தனர். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எவ்வித காயங்கள் இல்லாமல் காப்பாற்றப்பட்டனர்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: ST quota to Dhangars: Maha tribal MLAs jump onto safety net from Mantralaya’s 3rd floor, Dy Speaker Zirwal leads protest

மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலுடன் என்.சி.பி-யின் கிரண் லஹமேட், பகுஜன் விகாஸ் அகாடியின் (பி.வி.ஏ) ராஜேஷ் பாட்டீல், காங்கிரஸின் ஹிராமன் கோஸ்கர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க  ஹேமந்த் சாவ்ரா ஆகியோர் இணைந்து இருந்தனர். 

தங்கர்களை எஸ்.டி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிராக பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைக்கு மகாராஷ்டிரா மாநில அரசு பதிலளிக்காததற்கு எதிராக செப்டம்பர் 30 அன்று மந்திராலயாவுக்கு வெளியே ஒரு நாள் முற்றுகைப் போராட்டத்தை நடத்திய துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் தலைமையிலான இரண்டாவது போராட்டம் இதுவாகும்.

ஆளும் கூட்டணியின் மூத்த பழங்குடி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், தான் முதலில் பழங்குடியினராகவும், பின்னர் அரசாங்கத்தில் பதவி ஏற்பதாகவும் கூறினார். "பெசா (பஞ்சாயத்துகளின் விதிமுறைகள் (பட்டியலிடப்பட்ட பகுதி விரிவாக்கம்)) கீழ் அறிவிக்கப்பட்ட பட்டியல் பழங்குடியின விண்ணப்பதாரர்களின் நியமனம் நிறுத்தப்பட்ட செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும். அந்த மாணவர்கள் இதைக் கோரி சாலைகளில் தூங்குகிறார்கள், ஒரு அரசாங்கப் பிரதிநிதி கூட அவர்களைப் பார்க்கவில்லை" என்று அவர் கூறினார். 

மேலும் அவர் தங்கர்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக அரசியலமைப்பிற்கு முரணான எந்த முடிவையும் அரசாங்கம் எடுக்கக்கூடாது என்றும் தங்கர் இட ஒதுக்கீடு குறித்த டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் (TISS) அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேய்ப்பர் சமூகமான தங்கர்கள், எஸ்.டி அந்தஸ்தைப் பெற்ற தங்காட் பழங்குடியினர் தங்கர்களைப் போலவே இருப்பதாகவும், "எழுத்துப்பிழையால் அவர்களுக்கு எஸ்.டி அந்தஸ்து கிடைத்துவிட்டது" என்றும் கூறுகின்றனர். இது தொடர்பாக சமூகத்தின் மனுக்களை உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் நிராகரித்தன. தங்கர்கள் தற்போது ஓ.பி.சி அந்தஸ்தை அனுபவித்து வருகின்றனர் மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் 25-30 சட்டமன்றத் தொகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு, தங்கர் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்த பிறகு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில அரசு மற்றவர்களைப் புண்படுத்தாமல் அவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் என்று கூறியிருந்தார். மற்றொரு அமைச்சர் சம்புராஜ் தேசாய், தங்கர்களுக்கு எஸ்.டி அந்தஸ்து அளித்து அரசாணை வெளியிடுவது குறித்து அரசு யோசிக்கும் என்று கூறினார். அப்போதிருந்து, பழங்குடி சமூகங்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment