கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி, இந்துத்துவ சித்தாந்தவாதியான தாமோதர் சாவர்க்கர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு தகுதியிருந்தும் , கொடுக்கப்படாமல் புரகணிக்கப்பட்டார், என்று கூறினார். மத்திய பிரதேசத்தின் அகோலா என்ற நகரத்தில் பேசிய போது , "இந்திய தேசத்தை கட்டியெழுப்பியதில் தேசியவாதம் முக்கிய பங்காற்றுகிறது, அந்த தேசியவாத சிந்தனையில் சாவர்க்கரின் பங்களிப்பு மிகவும் அதிகம்" என்று கூறினார்.
Advertisment
அப்போது, எதிர்க்கட்சியைத் தாக்கிய பிரதமர், அம்பேத்கருக்கு பாரத ரத்னாவை மறுத்தவர்கள் தான், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துஷ்பிரயோகம் செய்து சாவர்க்கருக்கு பாரத ரத்தன தராமல் அவமதித்தவர்கள், என்றும் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை தடுத்து நிறுத்தும் எதிர்கட்சியின் செயல் வெட்ககரமானது என்றும் தெரிவித்தார்.
மோடியின் தேர்தல் பிரச்சாரம் :
370 வது பிரிவுக்கு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரும் அதன் மக்களும் பாரத மாதாவின் மகன்கள் என்று நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன், ”என்று மோடி கூறினார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “சாவர்க்கர் ஒரு சிறந்த புரட்சிகர மற்றும் சுதந்திர போராட்ட வீரர்… இதுபோன்ற பெரிய மனிதர்களை நாம் ஏன் ஒரு குறுகிய அரசியல் எண்ணத்தோடு பார்க்க வேண்டும். பாரத ரத்தன விருதுக்கு அவர் உண்மையிலேயே தகுதியானவர், அதை கொடுக்க இந்த தேசம் ஒன்றுபடட்டும் , என்று கூரினார்.