New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/shiv-shena.jpg)
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் போக்குவரத்து துறை அமைச்சருமான திவாகர் ரோட்டே ஆளுநர் பகத் சிங் கோஷியாரி-ஐ தனித்தனியாக சந்தித்து, அரசியல் சூழ்நிலையைப் பற்றி விளக்கமளித்துள்ளனர்.
50:50 அதிகாரப் பகிர்வு , இரண்டரை வருடம் முதலமைச்சர் பதவி என்ற கணக்கில் சிவசேனா திடமாக இருப்பதால், இந்த கூட்டணி இன்னும் முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரவில்லை. கடந்த 24ம் தேதி 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் ஆன போதிலும், வாக்குவாதம் செய்வதிலும், சுயேச்சை எம்எல்ஏ க்களை கைப்பற்றி தங்களது பலத்தைக் கூட்டுவதிலும் பாஜகவும் - சிவசேனாவும் கவனம் செலுத்திவருகின்றன.
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரோட்டே, “50:50 அதிகாரப் பிரிவில் முடிவாக உள்ளது. இரண்டரை ஆண்டு சிவசேனாவின் உறுப்பினர் முதல்வராக இருப்பார் என்பதை பாஜக எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். ஆனால், பாஜக துணை முதல்வர், மற்றும் வருவாய் இலாக்காவை மட்டும் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறது.
இன்னும் ஒரு படி மேலே சென்று, காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை வந்தால் அந்த வாய்ப்பை சிவசேனா தவிர்க்காது என்று அதன் தலைவர்கள் வெளிப்படையாக சொல்லி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி 44 உறுப்பினர்களையும் , சரத் பவார் கட்சி 54 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசேனா , காங்கிரஸ் , சரத் பவார் தேசிய வாத காங்கிரஸ் ஆகயவைகளின் எண்ணிக்கையைக் கூட்டினாலே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைத்துவிடும். ஆனால், காங்கிரஸ், சரத் பவார் தேசிய வாத காங்கிரஸ் இது போன்ற எண்ணங்களில் இருந்து விலகி இருப்பதாகவே தெரிகிறது. தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் பிரபுல் படேல் இது குறித்து தெரிவிக்கையில், " ஆட்சி அமைக்க உரிமைக் கோர போவதில்லை. திறமையான, மேம்பட்ட எதிர்கட்சியாக இருக்கவே விரும்புகிறோம்" என்றார்.
2014 சட்டமன்றத் தேர்தலை விட , 2019 - ல் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் கிடைத்த வெற்றி விகிதங்கள் அதிகமாக இருந்தாலும், கடந்த தேர்தலை விட இம்முறை கம்மியான எண்ணிகையோடு (17 சீட் குறைவு ) உள்ளது. சிவசேனாவும் கடந்த தேர்தலை விட இந்த முறை 7 சீட்டுகளை குறைவாக பெற்றுள்ளனர்.
பாஜக கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், " சிவ சேனா கொடுக்கும் அரசியல் அழுத்தங்கள் எங்களுக்கு பழகிய ஒன்று , கூட்டணியில் இது ஒன்றும் புதிதல்ல, இருந்தாலும் அதிகாரத்தை எவ்வாறு பகிர்வது, எந்த முறையில் கொண்டு செல்வது என்பது சற்று சவாலான விஷயம்" என்று கூறினார்.
இந்நிலையில் சிவசேனாவின் செய்தித் தாளான சாம்னா பத்திரிகையில், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து 1.75 லட்சம் கோடி வாங்க மத்திய அரசு நிர்பந்திக்கப் பட்டதாக கூறுகிறது .
உள்நாட்டு சந்தை அமைதியாக இருக்கிறது, ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களின் கல்லாப் பெட்டிகள் நம் நாட்டு பணத்தால் நிரம்புகின்றன… உன்னிடம் ஏன் இவ்வளவு மௌனம் தம்பி ? என்ற கேளிவியும் அந்த கட்டுரையில் இருந்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.