Advertisment

மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களின் ஒழுக்கத்தைப் பாராட்டினார் - மோகன் பகவத்

Gandhi applauded RSS workers’ discipline - Mohan Bhagwat: மகாத்மா காந்தி, பிரிவினை காலத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஷாகாவைப் பார்வையிட்டு ஸ்வயம் சேவகர்களுடன் உரையாடினார் என்றும் அவர்களுடைய ஒழுக்கம் மற்றும் பிரிவினை உணர்வின்மையால் ஈர்க்கப்பட்டார் என்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் புதன்கிழமை தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gandhi jayanti, mohan bhagwat, mahatma gandhi,gandhi collectibles, gandhi jayanti 2019, gandhi jayanti news, mahatma gandhi jayanti, gandhi at 150, மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள், மகாத்மா காந்தி, ஆர்.எஸ்.எஸ். ஷாகா, மோகன் பகவத், gandhi jayanti 150 anniversary, mohan bhagwat, mahatma gandhi, gandhi jayanti, Tamil indian express

ஷாகாவில் காலை பிரார்த்தனையின் ஒரு பகுதியாக காந்தியையும் அவரது மதிப்புகளையும் சங்க ஸ்வயம் சேவகர்கள் நினைவு கூர்ந்தனர். அதன் பணியாளர்கள் தினசரி கூட்டங்களில் ஓதப்படும் ‘ஏகமாதா ஸ்தோத்திரத்தை’ குறிப்பிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், “காந்திஜி… பிரிவினையின் துயரமான நாட்களில் டெல்லியில் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஒரு ஷாகாவைப் பார்வையிட்டார். ஷாகாவில் உள்ள ஸ்வயம்சேவர்களுடன் உரையாடினார். அந்த செய்தி செப்டம்பர் 27, 1947 தேதியிட்ட ஹரிஜனில் வெளியானது. சங்க ஸ்வயம் சேவகர்களின் ஒழுக்கம் மற்றும் அவர்கள் சாதி, மத உணர்வுகள் முழுமையாக இல்லாமல் இருப்பது குறித்து காந்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.” என்று மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் இணையதளத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் கூறினார்.

மேலும், “காந்தி 1936 ஆம் ஆண்டில் வார்தாவிற்கு அருகிலுள்ள ஒரு சங்க முகாமையும் பார்வையிட்டார். அடுத்த நாள் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவரை தனது ஆசிரமத்தில் சந்தித்தார். அந்த நீண்ட கேள்வி-பதில் வடிவிலான அமர்வு மற்றும் கலந்துரையாட உள்ளடக்கங்கள் இப்போது பொது தளத்தில் உள்ளன” என்று கூறினார்.

நாட்டுக்காக காந்தியின் சுதேசி பார்வைக்கு முக்கியத்துவம் அளித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுகையில், “மகாத்மா ஒரு சிந்தனை செயல்முறையை வழங்கினார். அது இந்தியாவுக்கு அனைத்து துறைகளிலும் தனது சுய அடையாளத்தை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அடிமை மனப்பான்மை கொண்ட மக்கள் மேற்கத்திய மதிப்புகளை ஒரு முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டனர்.

“இருப்பினும், இதைப் புரிந்து கொள்ளாமல், அடிமை மனப்பான்மை கொண்ட மக்கள் மேற்கத்திய மதிப்பீடுகளை ஒரு முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நமது முன்னோர்கள், நமது பெருமை மற்றும் கலாச்சாரத்தை தாழ்த்தி அவமானகரமானது என்று கண்டித்து, மேற்கைப் பின்பற்றுவதிலும் புகழ்ச்சியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அதன் பாரிய செல்வாக்கு நாட்டின் அனைத்து திசைகளிலும் நிலையிலும் இன்றும் காணப்படுகிறது” என்று அவர் கூறினார்.

காந்தி தன்னம்பிக்கையின் அடிப்படையில் பாரதத்தின் மறுசீரமைப்பிற்கு முயன்றார். மேலும், அவர் தேசத்தின் தந்தையாக சமூக சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்திற்காக உறுதியாக நின்றார். தனது பார்வையை செயல்பாட்டுக்கு மொழிபெயர்த்தார். அவரது வாழ்நாள் முழுவதையும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக அமைத்தார்.

“அதை நம் வாழ்க்கையில் உணர்ந்து புரிந்துகொண்டு வெளிப்படுத்த வேண்டும். இதன் காரணமாகத்தான், அவருடன் சிறிய கருத்து வேறுபாடுகள் உள்ளவர்களும் கூட பயபக்தியுடன் பார்த்தார்கள் ”என்று அவர் கூறினார். மேலும், காந்தியின் புனிதமான, அர்ப்பணிப்பு மற்றும் வெளிப்படையான வாழ்க்கை மற்றும் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை பார்வை ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கான உறுதிமொழியை எடுக்குமாறு மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Mohan Bhagwat Mahatma Gandhi Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment