தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியின் உத்தரவின் பேரில் மக்களவையில் கேள்விகள் கேட்பதற்காக மஹுவா மொய்த்ரா லஞ்சம் மற்றும் சலுகைகளை பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷிகாந்த் துபேயின் குற்றச்சாட்டுகளை மக்களவைக் குழு விசாரித்து வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Unethical, personal questions’: Mahua Moitra storms out of Lok Sabha Ethics panel meet
வியாழக்கிழமை நடைபெற்ற லோக்சபா நெறிமுறைக் குழு கூட்டத்தில் குழுத் தலைவர் தனது தனிப்பட்டவிஷயம் குறித்தும், நெறிமுறை இல்லாத கேள்விகளைக் கேட்டதாகக் குற்றம் சாட்டி டி.எம்.சி எம்.பி மஹுவா மொய்த்ராவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேறினர்.
தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியின் உத்தரவின் பேரில் மக்களவையில் கேள்விகள் கேட்பதற்காக மொய்த்ரா லஞ்சம் மற்றும் சலுகைகளை பெற்றதாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபேயின் குற்றச்சாட்டுகளை மக்களவைக் குழு விசாரித்து வருகிறது. நெறிமுறைக் குழுவிற்கு எழுதிய கடிதத்தில், குற்றச்சாட்டுகளை நிராகரித்த மஹுவா - 'லஞ்சம் கொடுத்தவர்' என்று கூறப்படும் ஹிராநந்தனி மற்றும் புகார்தாரர், வழக்கறிஞர் ஜெய் தெஹாத்ராய் ஆகியோரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கேட்டார்.
காங்கிரஸ் எம்.பி-யும் குழு உறுப்பினருமான என் உத்தம் குமார் ரெட்டி, மஹுவா மொய்த்ராவிடம் குழுத் தலைவரின் கேள்விகள் "கண்ணியமற்ற மற்றும் நெறிமுறையற்றவை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனர் என்று குற்றம் சாட்டினார்.
டெல்லி: நாடாளுமன்ற நெறிமுறைக் குழு கூட்டத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பிஎஸ்பி எம்பி டேனிஷ் அலி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மஹுவா மொய்த்ரா அக்டோபர் 19-ம் தேதி நெறிமுறைக் குழுவிடம் அளித்த பிரமாணப் பத்திரத்தில், மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற இணையதள உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை (Login ID and Password) தனக்கு வழங்கியதாக ஹிராநந்தனி கூறினார். இதனால் அவர் தேவைப்படும் போது அவர் சார்பாக நேரடியாக கேள்விகளை இடுகையிட முடியும்.
பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே அக்டோபர் 15-ம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா வணிகக் குழுவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதற்காக லஞ்சம் பெற்றார் என்று குற்றம் சாட்டினார். குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்திய அவர், குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை அவரை சபையில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு கோரினார்.
இதற்கிடையில், மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் விவரங்களை தனது நண்பரும் தொழிலதிபருமான தர்ஷன் ஹிராநந்தனியிடம் கொடுத்ததாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த பணத்தையும் வாங்க மறுத்ததாகவும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தெஹாத்ராய் மத்திய புலனாய்வுப் பணியகத்திடம் அளித்த புகாரில் கூறியுள்ளார்.
மக்களவை நெறிமுறைக் குழு மஹுவா மொய்த்ரா மீது கேள்வி கேட்பதற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து வரும் நிலையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-ஸுக்கு அளித்த பேட்டியில், மஹுவா மொய்த்ரா, “எந்த எம்.பி.யும் தன்/தனது சொந்தக் கேள்வியை தட்டச்சு செய்யவில்லை. நான் அவருக்கு (தர்ஷன்) பாஸ்வேர்டையும் கொடுத்தேன்., அவரது அலுவலகத்தில் உள்ள ஒருவர் உள்நுழைந்து அதை (கேள்விகளை) தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்துள்ளார்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.