அருண் ஜனார்தனன், சாகர் ராஜ்புத்
மைத்ரிபால சிறிசேனா : இலங்கை நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம், கொழும்பு புறநகர் பகுதியில் ஒருவரை கைது செய்திருக்கிறார்கள் இலங்கை புலனாய்வு பிரிவினர்.
அவர் ஒரு இந்தியர் என்றும், அவருக்கும் இந்திய புலனாய்வு அமைப்பான ராவிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ரா அமைப்பினர் தன்னை கொல்ல முயலுவதாக சிறிசேனா அறிக்கை வெளியிட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்குமாறு சிறிசேனா மோடிக்கு அழைப்பு விடுத்து பேசி, வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்று கூறியிருக்கிறார். ரா அமைப்பு விவகாரம் தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
ஆனால் தற்போது கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரின் குடும்ப உறுப்பினர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடை சகோதரர் “என்னுடைய அண்ணன் இந்த நாட்டின் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு 90களின் பிற்பாதியில் இருந்து மனநலம் சரியில்லாமல் இருக்கிறது. எனவே அவரை விடுதலை செய்து, மனநல சிகிச்சை அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மைத்ரிபால சிறிசேனா விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் யார் ?
கொழும்பு புறநகர் பகுதியில் கைது செய்யப்பட்டவர் இந்தியாவைச் சேர்ந்த தாமஸ் ஆவார். அவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். மும்பை புறநகர் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வரும் அவர் தாமஸ் பற்றிய தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக கொடுத்திருக்கிறார்.
தாமஸ் சில ஆண்டுகள் மும்பை ஏர்போர்ட் அத்தாரிட்டியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து கேரளாவிற்கு மாற்றுதலாகி சென்றிருக்கிறார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் தாமஸ்ஸின் சகோதரர் கூறியிருக்கிறார். சில ஆண்டுகளில் விவாகரத்து ஆகியுள்ளது. கேரளாவில் தனக்கு ஏகப்பட்ட சொத்துகள் இருப்பதாகவும், ஜீவனாம்சமாக அதனை தன் மனைவி பறித்துக் கொள்வார் என்றும் பதட்டமான சூழலில் சில நாட்கள் தாமஸ் வாழ்ந்து வந்திருப்பதாக அவரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
2007ம் ஆண்டு இருவரும் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்த போது பார்த்துக் கொண்டது தான். பின்பு இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை. சில மாதங்களிலேயே தாமஸ் தன்னுடைய வேலையை உதறிவிட்டு இந்தியா திரும்பிவிட்டார்.
கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து 2017ம் ஆண்டு மீண்டும் இருவரும் பேச ஆரம்பித்த போது, நான் இலங்கையில் இருக்கிறேன் என்றும், நீயும் இங்கு வா என்றும் என் அண்ணா கூறினார். ஆனால் அவர் பணத்திற்காக மிகவும் கஷ்டப்படுகிறார் என எனக்குத் தெரியும். சில நேரங்களில் மிஸ்ட் கால்கள் மட்டுமே தருவார். நான் தான் திருப்பி கால் செய்வேன்.
கடந்த முறை போன் செய்த போது “என் உயிருக்கு ஆபத்தான சூழலில் நான் இருக்கிறேன்... எனக்கு எதிரிகள் அதிகரித்துவிட்டனர்...” என்று கூறினார். நான் “இந்திய தூதரக அதிகாரிகளை அணுகவும் என்று நான் கூறிய போது பதில் எதுவும் கூறாமல் போனை வைத்துவிட்டார்” என்று கூறினார்.
ஒரு வாரம் கழித்து இந்திய அதிகாரிகள் எங்கள் வீட்டில் வந்து "தாமஸ்ஸினை இலங்கை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அவருடைய விசா காலம் முடிந்தும் அவர் அங்கு தங்கியிருப்பதால் கைது செய்யப்பட்டதாகவும், அவருடைய ஆதார் கார்ட் வேண்டும் என கேட்டதாகவும்” கூறியிருக்கிறார்.
தாமஸ், தீவிரவாத ஒழிப்பு பிரிவின் கீழ் இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவருடன் யாரையும் பேச அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.