Malayalam TV news channel MediaOne barred from transmission by Centre: ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவைக் கொண்ட, மலையாள செய்தி சேனலான மீடியாஒன் டிவியின் ஒளிபரப்பை, "பாதுகாப்பு காரணங்களுக்காக" மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. திங்கள்கிழமை நண்பகல் முதல் அந்த சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
மீடியாஒன் தொலைக்காட்சியின் ஆசிரியர் பிரமோத் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சேனலை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. "பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது, ஆனால் சேனல் நிர்வாகம் இன்னும் விவரங்களைப் பெறவில்லை. இந்த தடை குறித்த விவரங்களை மீடியாஒன் டிவிக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை. தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். செயல்முறையை முடித்த பிறகு, சேனல் பார்வையாளர்களிடம் திரும்பும். கடைசியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையில் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி சேனலின் உரிமம் காலாவதியாகவில்லை என்றும், தடை விதிக்கப்பட்டபோது சேனலின் உரிமத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும் சேனல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்றாலும், சேனல் பாதுகாப்பு அனுமதி பெறாததால், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மூத்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதுள்ள கொள்கையின்படி 10 வருட காலத்திற்கு வழங்கப்படும், செய்தி பிரிவில் தனியார் செயற்கைக்கோள் டிவி சேனலாக அதன் உரிமத்தை புதுப்பிப்பதற்கு சேனலின் "பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டது" என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மத்தியமம் பிராட்காஸ்டிங் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான செய்தி வகையின் கீழ் செயல்படும் மீடியா ஒன் டிவி சேனல், செப்டம்பர் 2011 முதல் அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் அனுமதிகளைக் கொண்டுள்ளது என்பதை அமைச்சகத்தின் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியல் காட்டுகிறது.
I&B அமைச்சகத்தின் அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் லைசென்ஸ் கொள்கையின்படி, ஒவ்வொரு சேனலும் நாட்டில் ஒளிபரப்பு உரிமம் பெற, உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அனுமதியைப் பெற வேண்டும். பாதுகாப்பு அனுமதியானது, தற்போதுள்ள கொள்கையின் கீழ், பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், அதன் பிறகு சேனல் அதை மீண்டும் பெற வேண்டும்.
சமீபத்திய ஆண்டுகளில் மீடியாஒன் டிவி ஒளிபரப்புவதில் இருந்து தடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். மார்ச் 2020 இல், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்கள் குறித்து செய்தி வெளியிடும் போது, கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்ஸ் (ஒழுங்குமுறை) சட்டம், 1998 இன் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 48 மணிநேரம் சேனலுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
சேனலைத் தடுப்பது ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பானது என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறினார்.
மீடியாஒன் சேனலின் ஒளிபரப்பை மீண்டும் ஒருமுறை மத்திய அரசு இடைநிறுத்தியது ஜனநாயக விரோதமானது. போதிய காரணங்களைக் கூறாமல் அந்தச் சேனலைத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. இது இயற்கை நீதியை மீறும் செயலாகும். சேனலின் ஒளிபரப்பை நிறுத்தியதற்கான காரணங்களை தெரிவிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஒளிபரப்பை நிறுத்துவதன் மூலம், விரும்பத்தகாத செய்திகளுக்கு சகிப்பின்மை காட்டும் சங்பரிவார் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இது ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பானது” என சதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.