காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் வரை நிகழ்ந்த பெரும் குழப்பங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே - கடைசி நிமிடத்தில் வெள்ளிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதன் மூலம், அவர் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் மற்றும் ஜார்கண்ட் எம்எல்ஏ கேஎன் திரிபாதியுடன் போட்டியிடுகிறார்.
கார்கேவுக்கு ஆதரவாக 14 பரிந்துரைகளும், தரூர் 5ம், திரிபாதி ஒன்றும் பெற்றனர்.
உயர் பதவிக்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்திய, கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் போட்டியில் இருந்து விலகுவதை உறுதி செய்தார். கார்கேவை முன்மொழிந்தவர்களில் அவரும் ஒருவர்.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட், சொந்த மாநிலமான கர்நாடகா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவரது பெயரை முன்மொழிந்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தனது ஆதரவாளர்கள் நெருக்கடியைத் தூண்டிய ராஜஸ்தானில், நிகழ்ந்த சம்பவங்களை மேற்கோள் காட்டி வியாழன் அன்று போட்டியிலிருந்து வெளியேறினார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலித் தலைவர் முகுல் வாஸ்னிக், கார்கேவின் பரிந்துரையாளர்களில் ஒருவர். காந்தி குடும்பத்தின் விருப்பமாக அவரது பெயரும் சுற்றிக் கொண்டிருந்தது.
கடந்த வாரம் நெருக்கடி ஏற்பட்ட ராஜஸ்தானின் காங்கிரஸ் பொறுப்பாளரான அஜய் மாக்கன், டெல்லியில் இருந்து கார்கேவை முன்மொழிந்தவர்களில் ஒருவர்.
பூபிந்தர் சிங் ஹூடா (ஹரியானா), வி நாராயணசாமி (புதுச்சேரி), பிருத்விராஜ் சவான் (மகாராஷ்டிரா), மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி, அம்பிகா சோனி (ஹரியானா), ஆனந்த் சர்மா (இமாச்சல பிரதேசம்), அபிஷேக் சிங்வி ( ராஜஸ்தான்), தாரிக் அன்வர் (பீகார்), சல்மான் குர்ஷித் (உத்தரப்பிரதேசம்), பிரமோத் திவாரி (உத்தர பிரதேசம்), தாராசந்த் பகோரா (ராஜஸ்தான்), கமலேஷ்வர் படேல் (மத்திய பிரதேசம்), பி எல் புனியா (ராஜஸ்தான்), மூல்சந்த் மீனா (ராஜஸ்தான்), ரகுவீர் சிங் மீனா (ராஜஸ்தான்), அவினாஷ் பாண்டே (மகாராஷ்டிரா) மற்றும் வினித் புனியா (ஹரியானா) ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.
கார்கேவுக்குப் பின்னால் ராஜ்யசபா எம்.பி.க்கள், ராஜீவ் சுக்லா (உத்தர பிரதேசம்), சையத் நசீர் உசேன் (கர்நாடகா), தீரஜ் பிரசாத் சாஹு (ஜார்கண்ட்), அகிலேஷ் பி டி சிங் (பீகார்), மத்தியப் பிரதேச எம்எல்ஏ திலீப் குர்ஜார், உத்தரப் பிரதேச எம்எல்ஏ சஞ்சய் கபூர் மற்றும் மக்களவை எம்பிக்கள் தீபேந்தர் எஸ் ஹூடா (ரோஹ்தக்), வி வைல்திலிங்கம் (புதுச்சேரி) மற்றும் மணீஷ் திவாரி (ஆனந்த்பூர் சாஹேப்) ஆகியோர் உள்ளனர்.
திவாரி, சவான், ஹூடா, ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட பல தலைவர்கள் ஜி-23 இன் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் 2020 இல் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பெரிய அளவிலான சீர்திருத்தங்களைக் கோரி கடிதம் எழுதியிருந்தனர்.
குழுவின் முக்கிய உறுப்பினரான தரூர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வியாழனன்று கூறுகையில், குழுவின் ஆதரவை தான் எண்ணவில்லை. எனது குழு நாடு முழுவதும் கையெழுத்து சேகரிக்கிறோம். கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் போரோடோலோய் மற்றும் முகமது ஜாவேத் போன்ற எம்.பி.க்கள் அவரது படிவங்களில் முன்மொழிபவர்களாக கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“