Bharat Jodo Yatra - Mallikarjun Kharge letter to parties Tamil News: இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழா ஸ்ரீநகரில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள திமுக உள்ளிட்ட ஒருமித்த கருத்து கொண்ட 23 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்து இருந்தார்.
அந்த அழைப்பில், "ஸ்ரீநகரில் 30-ஆம் தேதி நடக்கும் நிறைவிழாவுக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுகிறேன். வெறுப்பு வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடி உயிர் நீத்த காந்தி நினைவு நாளில் நடக்கும் நிகழ்ச்சியை காந்தியின் நினைவுகளுக்கு அர்ப்பணிக்கிறோம்." என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த ஒற்றுமை பயணம் 2024 மக்களவைத் தேர்தலின் சூழலை கருத்தில் கொண்டு தான் நடப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி முதல் முறையாக நேற்று வெள்ளிக்கிழமை கூறியிருக்கிறது.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற "செய்தியாளர் சந்திப்பில் பேசிய தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், எதிர்க்கட்சிகளை அணுகுவது ஒருபோதும் யாத்திரையின்நோக்கம் அல்ல. ஆனால் அது இப்போது இயக்கத்தின் விளைவாக இருக்கலாம்.
அது ஒரு அவுட்ரீச் ஆக இருக்கட்டும் மற்றும் 2024 வரை இருக்க வேண்டிய நீண்ட உறவைத் தொடங்குவோம். அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளை இந்நிகழ்ச்சிக்கு அனுப்புவார்கள் என நம்புகிறோம்.
30-ம் தேதி ஸ்ரீநகரில் கூட்டத்தைப் பார்க்கலாம். (கூட்டத்தின் நோக்கம்) பாரத் ஜோடோ யாத்ரா முடிந்துவிட்டது… 2024 தேர்தலின் பின்னணியில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அதுபற்றி சில விவாதங்கள் நடைபெறும்,” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/