scorecardresearch

தேர்தல் தோல்வியை எப்படி சமாளிப்பது? சோனியா வழியில் குஜராத் தேர்தல் குறித்து குழு அமைத்த கார்கே

காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் இது போன்ற பல குழுக்களை அமைத்துள்ளது. உ.பி. பஞ்சாப் தேர்தல்களுக்குப் பிறகு காந்திகள் (ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி) மேற்பார்வை செய்த தேர்தல் குறித்து சுயபரிசோதனை இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தேர்தல் தோல்வியை எப்படி சமாளிப்பது? சோனியா வழியில் குஜராத் தேர்தல் குறித்து குழு அமைத்த கார்கே

காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் இது போன்ற பல குழுக்களை அமைத்துள்ளது. உ.பி. பஞ்சாப் தேர்தல்களுக்குப் பிறகு காந்திகள் (ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி) மேற்பார்வை செய்த தேர்தல் தோல்விகள் குறித்து சுயபரிசோதனை இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு, சோனியா காந்தி அடிக்கடி பின்பற்றி வந்த பாதையை பின்பற்றி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த மாதம் குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது குறித்து ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார். மேலும், சரியான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்படி அந்த குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் நிதின் ராவத் தலைமையில் மக்களவை எம்.பி சப்தகிரி சங்கர் உலகா மற்றும் பீகார் எம்.எல்.ஏ ஷகீல் அகமது கான் ஆகியோர் அடங்கிய குழு, தேர்தல் முடிவுகளை மதிப்பீடு செய்யும் என்றும் உடனடியாக அமல்படுத்தும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குழு இரண்டு வாரங்களுக்குள் காங்கிரஸ் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி) பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 27.28 சதவீத வாக்குகளைப் பெற்று 17 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்ததால், குஜராத்தில் காங்கிரஸின் செயல்பாடு எப்போதும் இல்லாத அளவில் மிக மோசமாக உள்ளது.

உண்மை கண்டறியும் குழுவை அமைப்பதற்கான கார்கேவின் முடிவு சுவாரஸ்யமாக உள்ளது. ஏனெனில், அவமானகரமான தோல்விகளுக்குப் பிறகு தலைவர்கள் தங்கள் கோபத்தையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்த சோனியா பெரும்பாலும் வெற்றிகரமாக கையாண்ட உத்தி இது. இந்தக் குழுவின் அறிக்கைகள், ஒன்றைத் தவிர, உயர்மட்டத் தலைமையுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை, அல்லது காங்கிரஸ் காரியக் கமிட்டி உட்பட கட்சியின் பல கூட்டங்களில் விவாதிக்கப்படவில்லை. இந்த குழுக்கள் பரிந்துரைத்த பரிந்துரைகள் அல்லது திருத்தங்கள் எப்போதாவது செயல்படுத்தப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு, சோனியா முதலில் சுயபரிசோதனை செய்ய ஒரு குழுவை அமைத்தார். ஏ.கே. அந்தோணி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு, தோல்விக்கான காரணங்களை கண்டறியும் பணியை மேற்கொண்டது. இந்த குழுவின் உறுப்பினர்களில் மணிசங்கர் ஐயர், மோதிலால் வோரா, பி.எம்.சயீத் மற்றும் பி.ஆர்.தாஸ்முன்ஷி ஆகியோர் அடங்கி இருந்தனர். அவர்கள் தொடர்ச்சியாக கட்சி அமைப்பு மற்றும் கட்டமைப்பு மாற்றங்களை பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அறிக்கை காங்கிரஸ் செயற்குழு முன் வைக்கப்பட்டது. செயற்குழு பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்தது. லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை, குறைந்தபட்சம், ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே, அறிவிக்காவிட்டால், 6 மாதங்களுக்கு முன்னதாகவே இறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை, 3 மாதங்களுக்கு முன்னதாகவே தேர்வு செய்ய வேண்டும் எனவும் அப்போதுதன் தேர்தலுக்கு தயார் செய்ய போதுமான அவகாசம் கிடைக்கும் என்றும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மற்றுமொரு முக்கிய ஆலோசனை காங்கிரஸ் செயற்குழு உட்பட அனைத்து மட்டங்களிலும் தேர்தல்களை நடத்துவது ஆகும். இந்த குழு பிரதிநிதித்துவ அமைப்பு இல்லை என்று கருதியது. எவ்வாறாயினும், சோனியாவின் பதவிக் காலத்தில் காங்கிரஸ் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. காங்கிரஸ் மிகவும் பலவீனமாக உள்ள மாநிலங்களில் கூட்டணியை உறுதிப்படுத்தவும் இந்த அறிக்கை பரிந்துரைத்தது.

1999-க்குப் பிறகு, 2008, 2012 மற்றும் 2014-ல் லோக்சபா தோல்விக்குப் பிறகு, ஆண்டனிக்கு மூன்று முறை சுயபரிசோதனை செய்யும் பணி வழங்கப்பட்டது. ஆனால், யாரும், உயர்மட்டத் தலைவர்கள் கூட எதுவும் கேட்கவில்லை.

2021-இல், அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் கட்சியின் தோல்வி குறித்து ஆராய சோனியா மற்றொரு குழுவை அமைத்தார். இதேபோல், இதற்கு முன் பலமுறை குழு அமைக்கப்பட்டதைப் போலவே, சல்மான் குர்ஷித், மணீஷ் திவாரி, வின்சென்ட் பாலா மற்றும் ஜோதி மணி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட அசோக் சவான் தலைமையிலான இந்தக் குழுவின் அறிக்கைகளின் உள்ளடக்கமோ அல்லது அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தோ தெரியவில்லை.

2021-ம் ஆண்டுக்கான குழு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்த குழு நான்கு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது. இதற்கு முந்த மற்ற எல்லா அறிக்கைகளைப் போலவே, இதுவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் குப்பைத் தொட்டியில் முடிந்தது… இந்தக் குழுக்கள் பெரும்பாலும் ஒரு கேலிக்கூத்தான கண் துடைப்பாக இருந்தது” என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

கடந்த ஆண்டு பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு சோனியா எந்த குழுவையும் அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி மற்றும் பஞ்சாபில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி முக்கிய பங்காற்றியதே இதற்குக் காரணம் என கட்சிக்குள்ளே விமர்சகர்கள் நம்புகின்றனர்.

“பிரியங்கா காந்தி வத்ரா அன்றும் இன்றும் உ.பி-யின் பொறுப்பில் இருக்கிறார். உயர் மின்னழுத்த ‘லட்கி ஹூன், லட் சக்தி ஹூன்’ கருப்பொருளுடன் அவர் முன்னிருந்து பிரச்சாரத்தை வடிவமைத்து வழிநடத்தினார். 40 சதவீத இடங்களை பெண்களுக்கு வழங்க முடிவு செய்தார். அவர் பெரும்பாலான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தார். பஞ்சாபில், மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து, கேப்டன் அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி, சரண்ஜித் சிங் சன்னியை முதலமைச்சராக நியமித்தது காந்திகள் என்பது அனைவரும் அறிந்ததே… அப்படியானால், இந்த தோல்விகளை விசாரிக்க விசாரணைக் குழுவை எப்படி நியமிக்கலாம்?” என்று ஒரு தலைவர் கூறினார்.

“குஜராத்தில் இந்த முறை ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவில்லை. மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே இந்த தோல்விக்கு மாநில பிரிவை குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இந்த குழுவிடம் இருந்து ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்…” என்று மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.

குஜராத் தேர்தல் முடிவுகள் மாநில அமைப்பில் மிகவும் சோகமான பிரதிபலிப்பு என்று ஏஐசிசி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதை அவர் குறிப்பிடுகிறார். காங்கிரஸ் பிரச்சாரத்திலும் உள்ளூர் தலைமையிலும் குறைபாடுகள் இருப்பதாக அவர் வாதிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Mallikarjun kharge takes a tip from sonia sets up panel to probe gujarat

Best of Express