Advertisment

ஆர்.என். ரவி மூலம் ஸ்டாலினுக்கு தொல்லை; 444 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியவர் மோடி; கார்கே விமர்சனம்

விழுப்புரம் மாவட்ட பொன்முடிக்கு இதே நிலைதான் ஏற்பட்டது. இதை நாடறியும், மோடி குறுக்கு வழியில் முன்னேறுவது தான் அவருக்கு பிடிக்கும். இதுவரை, 444 எம் பி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தன் கட்சியில் சேர்த்து உள்ளார்.

author-image
WebDesk
New Update
Malligarjun Kharge

444 எம்பி, எம்எல்ஏ-க்களவை விலைக்கு வாங்கியவர் மோடி என மல்லிகார்ஜூன கார்கே குற்றஞ்சாட்டினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Malligarjun Kharge | Lok Sabha Election | Puducherry | மோடி மஸ்தான் வேலை இந்தியாவில் இனி எடுபடாது என புதுச்சேரிக்கு இன்று இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தட்டாஞ்சாவடி பொதுக் கூட்டத்தில் மல்லிகா அர்ஜுன் கார்கே பேசினார்.

Advertisment

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கடலூர் விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (ஏப்.15,2024) புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பரப்புரை செய்தார்.

அப்போது, “இந்தியா கூட்டணி தேர்தல் வாக்குறுதியில் புதிய மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

2024  காங்கிரஸ் வந்தவுடன் புதுச்சேரி மாநிலத்திற்கு பணி மாநில அந்தஸ்து நிச்சயமாக வழங்கப்படும் ஆனால். பிஜேபி கூட்டணி சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியில் புதுச்சேரி மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்து பற்றி ஒரு இடத்தில் கூட அக்கட்சி தெரிவிக்கவில்லை.

இந்தியா முழுவதும் மோடியின் செல்வாக்கு சரிந்து கொண்டே வருகிறது. இந்திய மக்கள் மோடியை புறக்கணிப்பதாக  தெளிவுமாக தெரிகிறது.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி மாநிலத்தில் முடி கிடைக்கின்ற ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவும் மூடி கிடைக்கின்ற ரேஷன் கடைகள் நிச்சயமாக திறக்கப்படும். கூட்டுறவுத் துறையில் சம்பளம் வாங்காமல் உள்ள பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

1950 இல் அம்பேத்கர் இயற்றிய ஜனநாயக அரசியலமைப்பு சட்டத்தின்படி மோடி அரசு நடந்து கொள்வதில்லை. அமலாக்கத்துறை வருமானவரித்துறை, சிபிஐ, துறைகளை வைத்துக்கொண்டு எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள்,  தொழிலதிபர்கள், கட்டுப்பட கட்டுப்படவில்லை என்றால் இந்த துறைகளை அனுப்பி மிரட்டி அவர்களை தங்கள் கட்சியில் சேர்த்து படிய வைப்பது தான் மோடி அரசின் வேலை.

விழுப்புரம் மாவட்ட பொன்முடிக்கு இதே நிலைதான் ஏற்பட்டது. இதை நாடறியும், மோடி குறுக்கு வழியில் முன்னேறுவது தான் அவருக்கு பிடிக்கும். இதுவரை, 444 எம் பி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தன் கட்சியில் சேர்த்து உள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம் செய்ததுதான் முழு நேர வேலை ஆகும். தங்களுக்கு யார் படியவில்லையோ அவர்களுக்கு தேவையில்லாமல் தொல்லை கொடுப்பது தான் வேலை புதுச்சேரியில் நாராயணசாமி முதலமைச்சராக இருந்தபோது கவர்னரை வைத்து நிறைய தொல்லைகளை கொடுத்தவர்.

அதேபோன்று தற்போது தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு அந்த மாநில கவர்னர் ரவியை வைத்து நிறைய தொல்லைகளை கொடுத்து வருகிறார்.

கோப்புகளை திருப்பி அனுப்புவது சட்டசபையில் ஏற்பட்ட தீர்மானங்களை திருப்பி அனுப்புவது இப்படியாக தொல்லை கொடுப்பதுதான் மோடி அரசின் வேலை, அயோத்தியில் ஒரு கோயில் கட்டி முடிக்கப்பட்ட போது எனக்கும் சோனியா காந்திக்கும் முறையான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை 

ஆனால் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி ராமருக்கு என்றும் நாங்கள் அழைப்பிதழ் கொடுத்தும் அவர்கள் வரவில்லை என்றும் பொய் சொல்லி விடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி என்றுமே ராமருக்கு எதிரியானவர்கள் அல்ல. இந்த நாட்டில் ராமரை வணங்குபவர்கள் உண்டு, சிவ பக்தர்களும் உண்டு. அம்பாள் பக்தர்களும் உண்டு. அது அந்தந்த மக்களின் வழிபாடு கலாச்சாரமாகும்.

இதை வைத்து அரசியல் செய்வது மோடிக்கு கைவந்த கலையாகும். பத்தாண்டுகளில் இந்தியா1,55, லட்சம் கோடி வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்றுள்ளது.
ஆனால் 60 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சி செய்த போது 50 லட்சம் கோடி தான் கடன் பெற்றிருந்தது. இந்தியா முன்னேற நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது என மோடி மார்தட்டி கொள்கிறார்.

இந்தக் கடன் நடவடிக்கை பார்த்தாலே இந்தியா முன்னேறி நாடா என்பது தெரிந்துவிடும்.
2014 ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் வெளிநாடுகளில் பதுக்கி உள்ள கருப்பு பணங்களை மீட்டெடுத்து வந்து ஒவ்வொரு இந்திய குடிமகன் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என தெரிவித்தனர்.

தற்போது உங்கள் கணக்கில் அது வந்து விட்டதா என பொது மக்களை பார்த்து கேட்டார் பொதுமக்கள் வரவில்லை என கூறினார் இதிலிருந்து தெரிகிறதா யார் பொய் சொல்வது என்று அதேபோன்று நாங்கள் ஆட்சியில் வந்தால் ஒரு ஆண்டுக்கு ரெண்டு  கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வந்ததா? இதிலிருந்து தெரிகிறதா யார் பொய் சொல்வது என்று.
விவசாய  விலை பொருள்களுக்கு இரட்டிப்பு விலை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அது உங்களுக்கு வந்ததா என கூட்டத்தில் இருந்தவர்களை பார்த்து கேட்டார்.

ஒன்றும் வரவில்லை என கூட்டத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதிலிருந்து தெரிகிறது யார் பொய் சொல்வது என்று, இதனால் மோடியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

இந்தியா வளர்ச்சி பெற்று விட்டது எனக்கு ஒரு மோடி ஏன் தற்போது காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி கிராமப்புற ஊரக வளர்ச்சி திட்டத்தை அமல்படுத்துகிறார்.

இத்திட்டம் ஏழைகளின் திட்டம் இந்தியா தான் வளர்ச்சி அடைந்து விட்டது இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன மோடிக்கு?
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு அப்ரண்டீஸ் ( தொழில் பயிற்சி பழகுனர் முடித்து இளைஞர்களுக்கு சுமாராக 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவோம்.

குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், மதிய உணவு திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் இவர்களுக்கு மாநில அரசு வழங்கப்படும்.

சம்பளத்துடன் கூடுதல் இரட்டிப்பு சம்பளம் உயர்த்தப்படும் என அன்னை சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியோர் முடிவின்படி தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளோம் . காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் கேரன்ட்டியானவை.

ஆனால் மோடிக்கு ஒரு கொடுக்கும் வாக்குறுதிகள் எதுவுமே வேலனிட்டி கிடையாது. மோடி அமித்ஷா இருவருமே சலவை இயந்திரம்.

அவர்களுக்கு கட்டுப்படாத எம் எல் ஏ எம் பி தொழிலதிபர்கள் இருளை சிபிஐ அமலாக்கத்துறை வருமானவரித்துறை மூலம் மிரட்டி அவர்களை சலவை எந்திரத்தில் துவைத்து தனது கட்சியில் சேர்த்துக் கொண்ட பிறகு தூய்மை ஆகி விடுகின்றனர் என நினைத்துக் கொள்கிறார்கள்.

இதையே அரிச்சந்திரன் போல் பேசி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் சிந்தித்து கை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதைத்தொடர்ந்து அவர் நெய்வேலி மற்றும் வானூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Puducherry Lok Sabha Election Malligarjun Kharge
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment