scorecardresearch

மமதா மீது தாக்குதல்; மே.வ. பிரச்சாரத்தில் சிக்கல்

மமதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த ஆளுநர் ஜக்தீப் தன்கர் வெளியேற வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Mamata Banerjee injured, says ‘4-5 people pushed me’; poll panel seeks report

 Atri Mitra , Sweety Kumari

“இது ஒரு சதி. சிலர் வேண்டுமென்றே என்னைத் தள்ளினர். என்னைப் பாதுகாக்க எந்த நிர்வாகமும் இல்லை. காவல்த்துறை கண்காணிப்பாளரும் அங்கு இல்லை. அவர்கள் என்னை காயப்படுத்தவே இங்கு வந்தார்கள். நான் இப்போது கொல்கத்தா திரும்ப முடிவு செய்துள்ளேன், ”என்று மமதா கூறினார்.

தன்னைச் சுற்றி கூடியிருந்த கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மமதா கீழே விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்த பின்பு மமதாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறினார். பின்னர் அவர் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு கிரீன்காரிடர் சாலை வழியே அழைத்து செல்லப்பட்டார். இரவு 09.42 மணிக்கு அவர் மருத்துவமனையை அடைந்தார். கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ஒன்று கூடி அங்கே பாஜகவிற்கு கோஷங்கள் எழுப்பினார்கள்.

மமதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த ஆளுநர் ஜக்தீப் தன்கர் வெளியேற வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

“சில நபர்கள் மமதா பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கின்றார்கள். அவர்களின் வழியில் செல்லும் மமதாவை அங்கிருந்து ஒதுக்க நினைக்கின்றார்கள். அதனால் தான் ரௌடிகளால் அவர் தாக்கப்பட்டார். இதற்கு சரியான பதிலடியை மக்கள் அவர்களுக்கு திருப்பி தருவார்கள்” என்று கூறினார் மாநில அமைச்சரும் மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான சுப்ரதா முகர்ஜி.

ஒரு சிறிய விபத்தினை மிகப்பெரிய சதித்திட்டமாக மாற்ற முனைகிறார் மமதா என்று பாஜக குற்றம் சுமத்துகிறது. மேலும் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஒரு விபத்தினால் கூட அவர் கீழே விழுந்திருக்கலாம். ஆனால் வேண்டுமேன்றே அவர் தள்ளப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அவரை சுற்றிலும் எப்போதும் பாதுகாப்பிற்கு வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறினார். இது போன்ற தந்திரங்களை பயன்படுத்தி அனுதாபத்தை பெறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வப்பன் தாஸ்குப்தா, “மமதா அவர்கள் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் விரும்பினால், அவருக்கு தேவையான கூடுதல் பாதுகாப்பினை மத்திய உள்துறை அமைச்சகம் தர தயாராக உள்ளது” என்று ட்வீட் பதிவிட்டார்.

சி.பி.எம். கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் முகமது செலிம், பேதமின்றி முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒன்றும் முதன்முறையல்ல. கடந்த காலங்களிலும் கூட, இது போன்ற பல்வேறு கதைகளை அவர் உருவாக்கினார். அவரை மக்கள் நம்பக்கூடாது என்று கூறினார்.

அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான அதிர் ரஞ்சன் சௌத்ரி, இது அரசியல் பாசாங்குத்தனம் அன்றி வேறொன்றும் இல்லை. அவர் நந்திகிராமில் சிரமங்களை உணர்ந்த போது, அவர் இப்படி ஒரு நாடகத்தை நடத்த எண்ணியிருப்பார் என்று கூறினார்.

மேலும் படிக்க : ஒரு பிராமணருக்கு இந்துவாக இருப்பது எப்படி என்று யாரும் கற்றுத்தர வேண்டாம் – மமதா

ஆனால் மூத்த கட்சி தலைவர் ஆனந்த் ஷர்மா இந்த நிகழ்வு குறீத்து வருத்தப்படுவதாகவும், உடனடியாக மமதா நலம் பெற வேண்டும் என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் மனிஷ் திவாரி, மிலிண்ட் தியோரா ஆகியோர் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்தனர். அரசியலில் வன்முறைக்கு இடமே இல்லை என்று திவாரியும், பிரச்சார காலங்களில் பாதுகாப்பு இல்லாமல் போவதை காண்பது துரதிர்ஷ்டவசமானது என்று தியோராவும் கூறினார்கள்.

மற்ற எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்த தாக்குதலை கோழைத்தனம் என்று வர்ணித்தார். சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், இந்த விவகாரம் தொடர்பாக உடனே விசாரணையை துவங்க வேண்டும் என்று கூறினார். பகுஜன் சமாஜ் கட்சியின் குன்வர் தனிஷ் அலி, பானர்ஜி இந்த விபத்தில் பெரிதாக காயம் அடையவில்லை ஆனால் ஜனநாயகம் காயம் அடைந்துள்ளது என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Mamata banerjee injured says 4 to 5 people pushed me poll panel seeks report