/indian-express-tamil/media/media_files/RC9BypMWijghXhMOGRZl.jpg)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. (கோப்பு புகைப்படம்)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கொல்கத்தாவுக்கு அழைத்து வரப்படுகிறார் அங்கு அவர் மருத்துவர்களால் பரிசோதிக்கப்படுவார் என்று ஒரு அதிகாரி கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Mamata Banerjee suffers minor head injury as her car makes sudden halt to avoid collision with another vehicle
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை ஜிடி சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது பர்பா பர்தாமான் என்ற இடத்தில் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், “மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை திடீரென நிறுத்த வேண்டியிருந்தது, இதனால் மம்தா பானர்ஜியின் தலை காரின் கண்ணாடியில் மோதியது. டிரைவரின் முன் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார்.” என்று கூறினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பானர்ஜி மீண்டும் கொல்கத்தாவிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். அரசு நிர்வாக மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக முதல்வர் பூர்பா பர்தமான் சென்றிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து இன்னும் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.