/tamil-ie/media/media_files/uploads/2019/09/mmm-3.jpg)
mamata banerjee pm modi meet, modi mamata meet, modi meets mamata banerjee, Saradha chit fund scam, rajeev kumar Saradha chit fund scam, மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, சந்திப்பு, சாரதா நிதிநிறுவன முறைகேடு, சிபிஐ
சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரம் தொடர்பாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதன்கிழமை ( 18ம் தேதி) பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
சாரதா நிதி நிறுவன முறைகேடு, மேற்குவங்க மாநிலம் மட்டுமல்லாது, தேசிய அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை, சிபிஐ கைது செய்ய முயன்றபோது, முதல்வர் மம்தா பானர்ஜி, விடிய விடிய போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது மோடி தலைமையிலான மத்திய அரசை, மம்தா கடுமையாக சாடினார். மோடி அரசில், நாட்டின் கட்டமைப்பே சிதைந்துவிட்டதாக எல்லாம் பிரசாரம் செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திப்ப்பதற்காக மேற்குவங்க முதல்வர் அலுவலகம் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வரும் புதன்கிழமை (18ம் தேதி) சந்தி்ப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, மாநில வளர்ச்சி, மாநில நலன் சார்ந்த சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தர்ப்பவாத அரசியல் - பா. ஜ கருத்து : குற்றம் இழைத்தவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாரதா நிதிநிறுவன முறைகேடு விவகாரத்தில், சிபிஐ நடவடிக்கைகளிலிருந்து இருந்து தன்னை காத்துக்கொள்வதற்காகவே, முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக மேற்குவங்க பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மம்தா பானர்ஜி, சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.