2024 லோக்சபா தேர்தலில் நான், நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் ஒன்றிணைவோம் – மம்தா பேச்சு

கொல்கத்தாவில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக அதனுடைய ஆணவத்தாலும் மற்றும் மக்களின் கோபத்தாலும் தோல்வியை சந்திக்கும் என்று கூறினார்.

2024 லோக்சபா தேர்தலில் நான், நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் ஒன்றிணைவோம் – மம்தா பேச்சு

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் பிற தலைவர்கள் ஒன்றிணைந்து 2024 மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சியை முன்னிறுத்துவார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்தார்.

“நான், நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் மற்றும் பலர் 2024ல் ஒன்றிணைவோம். பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்க்கும். நாமெல்லாம் ஒரு பக்கம், பாஜக மறுபக்கம் இருகும். 300 இடங்கள் என்ற பா.ஜ.க.வின் ஆணவமே அதற்கு எதிரியாக இருக்கும். 2024 இல் ஆட்டம் தொடங்கும்” என்று அவர் கூறினார்.

கொல்கத்தாவில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர், பாஜக அதன் ஆணவத்தாலும் மக்களின் கோபத்தாலும் தோல்வியை சந்திக்கும் என்று கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் போர் முழக்கமான பெங்காலி மொழியில், ‘கேலா ஹோப்’ ‘ஆட்டம் தொடங்கிவிட்டது என்ற முழக்கம்தான், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவை தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வைத்தது.

ஜார்க்கண்டில் காவிக் கட்சி குதிரைப் பேரம் நடத்தியதாகக் கூறி தாக்கிய மம்தா பானர்ஜி, “சமீபத்தில் வங்காள காவல்துறையிர் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்களைக் பணத்துடன் கைது செய்தனர். மேலும், ஹேமந்த் சோரன் அரசாங்கம் கவிழ்வதைத் தடுத்தது என்று கூறினார்.

ஜூலை 30 ஆம் தேதி, மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள பஞ்ச்லா என்ற இடத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வாகனத்தை மறித்து சோந்தனை செய்ததில் அவர்களுடைய காரில் 49 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியதை அடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த பணம் தங்கள் மாநிலத்தில் பழங்குடியின்ர் பண்டிகைக்காக சேலைகள் வாங்குவதற்காக வைத்திருந்த பணம் என்று கூறினர்.

ஜார்க்கண்டில் ஜே.எம்.எம் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.10 கோடியும், அமைச்சர் பதவியும் வழங்கி ஹேமந்த் சோரன் அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகக் கூறியுள்ளது.

“சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் எங்களை அச்சுறுத்தலாம் என்று பாஜக நினைக்கிறது. இதுபோன்ற தந்திரங்களை அவர்கள் எவ்வளவு அதிகமாக பின்பற்றுகிறார்களோ, அந்த அளவுக்கு விரைவிலேயே, அடுத்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தல்களில் தோல்வியை சந்திப்பார்கள்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

மூத்த தலைவர்களான பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அனுப்ரதா மோண்டல் ஆகியோர் வெவ்வேறு வழக்குகளில் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனக்கும் அவரது கட்சித் தலைவர்களுக்கும் எதிராக விஷப் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகக் கூறினார். குறிப்பாக பாஜக மற்றும் ஊடகத்தின் ஒரு பிரிவை அவர் கடுமையாக சாடினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Mamata banerjee says i nitish kumar hemant soren will come together in 2024 lok sabha elections

Exit mobile version