பபானிபூரில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Mamata Banerjee wins Bhabanipur seat by a margin of 58,835 votes: பபானிபூர் இடைத்தேர்தலில் 58,535 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பபானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பபானிபூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பபானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலை விட 58,835 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். இதில் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளும் பெற்றனர்.

மம்தா பானர்ஜி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது முதல்வர் பதவியை மேலும்,நான்கரை ஆண்டுகள் தொடருவார். இந்த வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும்,இந்த வெற்றி குறித்து,மம்தா கூறுகையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி, பவானிபூர் தொகுதியில் 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளேன். நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதிவேலை. வங்கத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து, மத்திய அரசு எங்களை (அதிகாரத்திலிருந்து) அகற்ற சதித் திட்டங்களை தீட்டியது. நான் தேர்தலில் போட்டியிடாதபடி என் காலில் காயம் ஏற்பட்டது. எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். என்று கூறினார்.

இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்குவங்க மக்கள் மம்தா பானர்ஜி மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அவரது வெற்றி உறுதி செய்துள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mamata banerjee wins bhabanipur seat by a margin of 58835 votes

Next Story
கொலிஜீயம் பரிந்துரை விரைவில் ஏற்கப்படும்… என்.வி ரமணாவுக்கு உறுதியளித்த சட்ட அமைச்சர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X