ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மம்தா பானர்ஜி எழுதிய கவிதை

Mamata Banerjee Wrote poem after Chidambaram’s arrest: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை விமர்சித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, மம்தா பானர்ஜி வங்காள மொழியில் ‘முகவரி’ என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார்.

By: August 23, 2019, 7:51:30 PM

Mamata Banerjee Pens poem: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டில் தற்போதைய ஆட்சியின் கீழ் “ஜனநாயகம்” தோற்றுவிட்டது என தனது கவலையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கவிதை எழுதியுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை விமர்சித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, மம்தா பானர்ஜி வங்காள மொழியில் ‘முகவரி’ என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார்.

மம்தா பானர்ஜி அந்த கவிதையை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அவர் ஜனநாயகம் அதன் முகவரியை இழந்துவிட்டது. இந்த நாட்டின் வரலாறு இப்போது தெளிவற்றதாக உள்ளது என்று எழுதியுள்ளார்.

அந்த கவிதையில், ஊடகங்கள் இன்று அமைதியாக இருப்பதாகவும், ஒரு “அவமதிப்பு புயல்” நீதியின் பாதையை குறைத்துவிட்டதாகவும், உரிமைகள் இப்போது சாக்குகளிலும், சிறையில் உள்ள எதிர்ப்பாளர்களிடமும் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் பாசிசம் அனைவரையும் கண்டிக்கிறது என்பதை வலியுறுத்தி எழுதியுள்ளார். மம்தா தனது கவிதையில். எல்லாம் தெரிகிறது. ஆனால் அறியப்படவில்லை என்று எழுதியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பி.சிதம்பரத்தை கைது செய்யும் நடைமுறை தவறானது என்று கூறினார். மேலும், வளர்ச்சி என்பது மனச்சோர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மேலும், திகாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ப.சிதம்பரத்தை கைது செய்யும் இந்த செயல்முறை தவறானது என்று நான் நினைக்கிறேன். நான் சட்ட அம்சங்களைப் பற்றி பேசவில்லை. ஆனால், சிதம்பரம் இந்த நாட்டின் மூத்த அரசியல்வாதி, முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆவார். அவரது விஷயம் கையாளப்படும் விதம் மிகவும் வருத்தமாகவும் மோசமாகவும் இருக்கிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது, ”என்று அவர் கூறினார்.

மேலும் அவர், நாட்டில் ஜனநாயகம் அழுகிறது என்று கூறினார். “நம் நாட்டில் ஜனநாயக நிறுவனங்கள், தேர்தல் ஆணையம், ஊடகங்கள் மற்றும் நீதித்துறை ஆகிய நான்கு தூண்கள் உள்ளன. ஆனால், நம் நாட்டில் ஜனநாயகத்தைதான் நாம் காணவில்லை. ஜனநாயகம் அழுகிறது. இருப்பினும், நீதித்துறை பற்றி எந்தக் கருத்தும் இல்லை” ன்று அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மம்தா பானர்ஜி ஒரு கவிதை எழுதியிருந்தார். தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய அவர் தனது கவிதைக்கு ‘நான் உடன்படவில்லை’ என்று தலைப்பிட்டிருந்தார். அதில் அவர், வகுப்புவாதத்தின் நிறம் மற்றும் மத ஆக்கிரமிப்பை விற்பனை செய்வதை நான் நம்பவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Mamata banerjee wrote poem after chidambarams arrest

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X