மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அவ்வப்போது மாநில அரசை விமர்சித்து ஆளுநர் ட்வீட் செய்து வந்த நிலையில், மம்தா பானர்ஜி அவரை பிளாக் செய்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆளுநர்,முதல்வரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு விதிமுறைகளுக்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார்.
திங்கட்கிழமை, தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி, தங்கரின் நெறிமுறையற்ற மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான" பேச்சு காரணமாக ட்விட்டரில் அவரை பிளாக் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், "இதைச் செய்ய நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று கூறுவதற்கு வருந்துகிறேன். தினமும், என்னையும் எனது அதிகாரிகளையும் நெறிமுறையற்ற மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்கிறார். நாங்கள் அவருடைய வேலையாட்கள் அல்லது கொத்தடிமைகளாக இருப்பது போல் அறிவுறுத்தல்களை வழங்குகிறார். ஒவ்வொரு நாளும் அவருடைய ட்வீட்டைப் பார்த்து எரிச்சல் அடைந்தேன். அதனால் தான், அவரது ட்விட்டர் கணக்கை பிளாக் செய்தேன்" என்றார்.
மேலும், சிபிஐ, அமலாக்க துறை, சுங்கத்துறை அதிகாரிகள், கொல்கத்தா காவல் துறை ஆணையர், உள்துறை முதன்மை செயலாளர், காவல் கண்காணிப்பாளர் வரை அனைவரையும் ஆளுநர் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டிய மம்தா, இதுதொடர்பாக பிரதமருக்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
இதுதவிர, ராஜ் பவனில் உள்ள அனைவரையும் ஆளுநர் உளவு பார்க்கிறார். பெகாசஸ் உளவு நடைபெற்று கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
மம்தாவின் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து, திரிணமூல் கட்சி தலைவர்கள் ஆளுநரை பிளாக் செய்ய தொடங்கினர். டிஎம்சி எம்.பி டெரிக் ஓ பிரையன் தனது ட்விட்டர், மம்தா பானர்ஜி ஆளுநரை பிளாக் செய்துள்ளார். நல்லது. நானும் அதையே செய்கிறேன் என ஆளுநரை டேக் செய்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் பிளாக் செய்த தகவல் பரவ தொடங்கிய நிலையில், ஆளுநர் தங்கர் பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ச்சியாக ட்வீட் செய்துள்ளார்.
அதில், அரசியலமைப்பின் 159 வது பிரிவின் கீழ் அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் "இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை" மாநிலத்தில் யாரும் "தடுக்கவில்லை" என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
மற்றொரு ட்வீட்டில், அரசியலமைப்பின் 167 வது பிரிவின் கீழ் மாநில விவகாரங்களின் நிர்வாகம் மற்றும் ஆளுநர் அழைக்கும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் தொடர்பான தகவல்களை வழங்குவது முதலமைச்சரின் அரசியலமைப்பு ‘கடமை’.அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தகவல்களை அளிக்காமல் பிளாக் செய்ய போகிறாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.
பானர்ஜியின் நடவடிக்கைக்கு பதிலளித்த பாஜக தலைவர் சுகந்தா மஜூம்டர், ஆளுநர் முதலமைச்சரிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவரால் பதில் சொல்ல முடியாமல் தப்பியோடியுள்ளார் என்றார்.
சிபிஎம் தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில், " ராஜ்பவனில் மற்றவர்கள் உளவு பார்க்கப்படுவது நடைபெறுகிறது என்றால், அதனை முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும். இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு" என்றார்.
ஞாயிற்றுக்கிழமை பேசிய ஆளுநர் தங்கர், ஜனநாயகத்தின் காஸ் சேம்பர் ஆக மேற்கு வங்கம் மாறி வருகிறது. மனித உரிமைகள் நசுக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil