Advertisment

இந்தியா கூட்டணியை மதிக்காத மம்தா; காங்கிரஸ் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

இந்தியா கூட்டணியை மம்தா பானர்ஜி பெரிதுப்படுத்தவில்லை என காங்கிரஸின் ஆதிர் ரஞ்சள் சௌத்ரி கூறியுள்ளார். ராகுல் காந்தியின் யாத்திரையை திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Mamata is not serious about the alliance

இந்தியா கூட்டணியை மம்தா பானர்ஜி பெரிதுப்புடுத்தவில்லை என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

adhir-ranjan-chowdhury | trinamool-congress | நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நமடபெற உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணியில் சீட் பகிர்வில் சிக்கல் நிலவுகிறது.

இதனால் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “காங்கிரஸ் கட்சிக்கு 2 சீட்கள் மட்டுமே தர மம்தா பானர்ஜி விரும்புகிறார் என்றார்.

தொடர்ந்து, அமலாக்கத் துறை ரெய்டு குறித்து ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

Advertisment

இந்த நிலையில் லோக் சபாவின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான சீட் பகிர்வு குறித்து பகிரந்துக் கொண்டார்.

அமலாக்கத் துறை விவகாரத்தில் ஆளுங்கட்சி மீதான விமர்சனம் ஏன்?

பதில் : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஊழல் கறை படிந்தவர்களாக உள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

ரேஷன் கடை ஊழல் முதல் கல்வி வேலை வாய்ப்பு ஊழல் வரை அம்பலப்பட்டுவருகிறது. மறுபுறம் அமலாக்கத் துறை அதிகாரிகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குகின்றனர். இந்த அதிகாரம் அவர்களுக்கு யார் கொடுத்தது?

அதிகாரிகளுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்” என்றார்.

அமலாக்கத் துறை, மத்திய விசாரணைக் குழு, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எப்போதும் தொடர்கிறதே?

பதில் : மத்திய அரசு அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் இதர புலனாய்வு அமைப்புகளை சிலரை ஒடுக்க பயன்படுத்திவருகிறது. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் மேற்கு வங்கத்தில் நடக்கும் இந்த வழக்கு வித்தியாசமானது. இதில் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கிறது.

சந்தேஷ்காலி (Sandeshkhali) சம்பத்தை தொடர்ந்து மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை வைத்தீர்களே?

பதில் : பாரதிய ஜனதா கட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவ்வாறு பேசினேன். அவர்கள் என்.ஐ.ஏ. விசாரணை கோரினார்கள்.

நான். தைரியம் இருந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியுமா? என அவர்களை பார்த்து கேட்டேன்.  வங்கத்தில் நடக்கும் தாக்குதல்களுக்கு நிறம் கொடுத்து வாக்குகளாக மாற்ற பாஜக பார்க்கிறது.

அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கிய கும்பலில் ரோகிங்யா அகதிகள் இருந்ததாக பாஜக கூறுகிறது. இதற்கு மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும்தான் பொறுப்பு.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி எப்படி?

பதில் : மம்தா பானர்ஜி கூட்டணியை விரும்பவில்லை; அதனால்தான் காங்கிரஸிற்கு ஏற்கனவே உள்ள 2 இடங்களை கொடுக்க முன்வந்துள்ளார்.

அப்படியென்றால் கூட்டணி சாத்தியம் இல்லையா?

பதில் : என்னால் அப்படி உறுதியாக சொல்ல முடியாது.

இரண்டு சீட்கள் ஏற்றுக் கொள்ள முடியாதா?

பதில் : எப்படி முடியும்? என்னைப் பொறுத்தவரை 2 சீட்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த இரண்டு இடங்களை தக்க வைக்க மம்தா பானர்ஜியின் எந்தக் கருணையும் தேவை இல்லை. என்னால் மம்தா பானர்ஜி மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டுக்கும் எதிராக தனித்துப் போராட முடியும். நான் ஏற்கனவே இதனை நிரூபித்துள்ளேன்.

ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உங்களுக்கு வழங்கிய அழைப்பின் மீது நீங்கள் முடிவு எடுத்தீர்களா?

பதில்: இல்லை. நான் முறைப்படி அனைத்து மரியாதையுடனும் ஆசாரத்துடனும் அழைக்கப்பட்டேன். ஆனால் நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

ராகுல் காந்தியின் பாரத் நியாய் யாத்திரை வங்காளத்தை கடந்து செல்கிறது. இதில் மம்தா பானர்ஜி கலந்துகொள்வாரா?

பதில் : மம்தா பானர்ஜியின் மனதை என்னால் அறிந்துகொள்ள இயலாது. அவரின் விருப்பம் குறித்து கட்சிதான் அறிக்கை வெளியிட வேண்டும்.

ஆனால் இந்த யாத்திரையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் இது, “நியாயமற்ற” யாத்திரை என விமர்சித்துள்ளார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : ‘Mamata is not serious about the alliance… I can fight it alone, win 2 seats’: Adhir Chowdhury

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

trinamool congress adhir ranjan chowdhury Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment