மேற்கு வங்கத்தில் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் கூச் பீகாரில் திங்கள்கிழமை (ஜூன் 26) மம்தா பானர்ஜி பரப்புரையை தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்தும் பேசினார்.
அப்போது, “இதுவரை நாங்கள் பஞ்சாயத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இப்போது மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதை நீங்கள் காண்கிறீர்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன் கருத்து கேட்கப்பட்டன. யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். திருட்டை அனுமதிக்க மாட்டோம். யாருக்காவது பணம் வேண்டுமென்றால் அவருடைய படத்தை எடுத்து எனக்கு அனுப்புங்கள்.
இனி பஞ்சாயத்துகளை கட்டுப்படுத்துவோம். அதை யாரும் திருட விடாதீர்கள். எங்களுக்கு மக்கள் பஞ்சாயத்துகள் வேண்டும்” என்றார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பேசுகையில், “ஒரு நபர் பல பில்லியன் ரூபாயுடன் ரஷ்யா-அமெரிக்கா செல்கிறார். ஆனால், 100 நாள் திட்டப் பணத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
பலமுறை கோரிக்கை விடுத்தும் பணம் தரவில்லை. 100 நாள் வேலைக்கான ரூ.7,000 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அந்த பணத்தை திரிணாமுல் வசூல் செய்யும்” என்றார்.
தொடர்ந்து, பஞ்சாயத்து தேர்தலில் பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடிக்கும் என்று கூறிய முதல்வர், பஞ்சாயத்து தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜகவை தோற்கடித்து, நாட்டில் வளர்ச்சியை நோக்கிய ஆட்சியை அமைப்போம் என்றார்.
மேலும், மாநிலத்தில் பாஜக-சிபிஎம்-காங்கிரஸ் கூட்டணியை தனது கட்சி தோற்கடிக்கும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர், “சிபிஎம், காங்கிரஸ் மற்றும் பாஜக இங்கு கூட்டணி அமைத்துள்ளன. அவர்களை தோற்கடிக்கவும், டெல்லியில் மகா கூட்டணி அமைப்போம். இங்கு பாஜகவுக்கு எதிராக போராடுவோம். பாஜக, சிபிஎம் மற்றும் காங்கிரஸை தோற்கடிப்போம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“