மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை சந்திரயன் -2 தரையிறங்கும் நிகழ்வை இவ்வளவு முக்கியம் கொடுப்பத்தன் மூலமாக ‘பொருளாதார பேரழிவிலிருந்து’ கவனத்தை திசை திருப்ப அரசு முயற்சி செய்து வருகின்றது என்று கூறினார்.
அவர் கூறியதாவது "இந்திய நாட்டின் இது தான் நிலவுக்கான முதல் முயற்சியா? இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு போல, விண்வெளி பணி எதுவும் எடுக்கப்படவில்லையா ? என்ற கேள்விகளையும் முன் வைத்துள்ளார். இது பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று மம்தா பானர்ஜி சட்ட சபையில் தெரிவித்தார்.
சிதம்பரம் கைது பற்றி:
சிதம்பரம் வழக்கில் உள்ள ஆழாமான விவரங்கள் தனக்கு தெரியாது என்றும், சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் தெரிவித்தார். ஆனால், அவரை கைது செய்த முறையும், திகார் ஜெயிலில் அடைக்க வேண்டிய கட்டயாம் என்ன? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
என்.ஆர்.சி நடைமுறையைப் பற்றி:
மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி போன்ற நடைமுறையை தனது அரசு என்றும் அனுமதிக்காது, அசாமில் உண்மையான இந்திய குடிமக்கள் என்.ஆர்.சி லிஸ்டில் இருந்து விடுவிக்கப் பட்டிருப்பது தனக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஊடகம், நீதித்துறை போன்ற ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் மத்திய அரசின் ஆலோசகர்களால் நடத்தப்படுகின்றன. அரசியல் தாழ்ப்புணர்ச்சி விட்டுவிட்டு பொருளாதாரத்தில் இந்த அரசு கவனம் செலுத்தவேண்டும் என்று டாக்டர் மன்மோகன் சிங்கின் வார்த்தைகளை நானும் எதிரொலிக்கிறேன் என்றார்.