Advertisment

சியானா வன்முறை வழக்கு : குற்றம் சாட்டப்பட்டவருக்கு பா.ஜ.க மண்டல தலைவராக பொறுப்பு

டிசம்பர் 3, 2018 அன்று சியானாவில் நடந்த வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
SHO Subodh Kumar Singh

கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸபெக்டர் சுபோத் குமார் சிங்

2018 சியானா பசுவை கொன்றதாக கூறி ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சச்சின் அஹ்லாவத், உத்திரபிரதேச மாநிலம்  புலந்த்ஷாஹர் நகரின் பாஜக மண்டலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 38 வயதான அஹ்லாவத் புலந்த்ஷாஹரில் உள்ள பிபி நகர் மண்டல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் 31 மண்டல தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Man accused in 2018 Siyana violence made BJP zonal president in UP

சியானா கலவரம் தொடர்பான வழக்கில், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அஹ்லாவத் மீது கலவரம், பொது ஊழியரைத் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தத, அவரை தாக்கியது உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற வன்முறையில் சம்பவத்தில், சியானா போலீஸ் இன்ஸ்பெக்டர்  சுபோத் குமார் சிங் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே பாஜக மண்டல தலைவராக பொறுப்பேற்றது குறித்து திங்களன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய சச்சின் அஹ்லாவத், இந்த வழக்கில் தான் பொய்யாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது கிராமமான மஹாவில் சம்பவம் நடந்ததால் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நான் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது நான் பாஜகவின் சியானா மண்டல செயலாளராக இருந்தேன். நான் தூரத்தில் நின்று போராட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன், அந்த இடத்தில் இருந்த சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அதில் நான் இருந்ததால் போலீசார் என்மீது வழக்கு பதிவு செய்தனர். என்னைப் போலவே எனது கிராமத்தில் வசிக்கும் பலர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என் மீதுள்ள ஒரே போலீஸ் வழக்கு இதுதான். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது கடின உழைப்பு மற்றும் பாஜக உடனான நீண்டகால தொடர்பு காரணமாக நான் பிபி நகர் மண்டல தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன், ”என்று கூறியுள்ள மஹாவ் கிராமத்தின் பிரதானியான அஹ்லாவத் தனது கிராமத்தில் விவசாயம் மற்றும் பால் வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். வன்முறை சம்பவத்தின்போது, அஹ்லாவத், முக்கிய குற்றவாளியாக இருந்த அப்போதைய பஜ்ரங்தள் அமைப்பாளர் யோகேஷ் ராஜ் என்பவரை அழைத்து, அவரது கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படும் பசு வதை சம்பவம் குறித்து அவருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. உடனே அந்த இடத்தில் திரண்ட கும்பல் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்டது.

ஆனால், யோகேஷ் ராஜுக்கு அழைப்பு விடுக்கவில்லை என அல்வாத் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த அன்று, போலீஸ்காரர் ஒருவர் என்னிடம் செல்போனை கேட்டார். அவனிடம் கொடுத்தேன். அவர் தான் யோகேஷ்ராஜை அழைத்து பேசினார். இப்போது யாரும் இதை ஏற்கத் தயாராக இல்லைஎன்று அஹ்லாவத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவரது வழக்கறிஞர் அசோக் தாகர் கூறுகையில், கலவர வழக்கில் அஹ்லாவத் உட்பட 44 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.  அவர்களில் 6 பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சச்சின் அஹ்லாவத் மீது கொலைக் குற்றம் சாட்டப்படவில்லை. இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது, மேலும் நான்கு அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஹ்லாவத் ஜாமீனில் வெளிவருவதற்கு முன்பு மூன்று மாதங்கள் சிறையில் இருந்ததாக கூறியுள்ளார். இதனிடையே பாஜகவின் புலந்த்ஷாஹர் மாவட்டத் தலைவர் விகாஸ் சௌஹானும் அஹ்லாவத்தை ஆதரித்து பேசியுள்ளார்.இந்தச் சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காரணமாக, காவல்துறை எஃப்ஐஆரில் சச்சின் அஹ்லாவத் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. சச்சின் மட்டும் அந்த இடத்தில் இருந்தார். அவர் ஒரு தொழில்முறை குற்றவாளி அல்ல, அவர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. சச்சின் அஹ்லாவத் சுமார் ஒரு தசாப்த காலமாக கட்சியுடன் தொடர்புடையவர் மற்றும் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அவரை மண்டலத் தலைவராக்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாதுஎன்று சவுகான் கூறினார்.

டிசம்பர் 3, 2018 அன்று காலை, மஹாவ் கிராமத்தில் ஒரு வயலில் பசுவின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்சனை தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, சுமார் 50-60 கிராம மக்கள் சடலங்களை டிராக்டர்-டிராலிகளில் ஏற்றி, சிங்ராவதி போலீஸ் சாவடிக்கு வெளியே நிறுத்தி, புலந்த்ஷாஹர் செல்லும் நெடுஞ்சாலையைத் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். யோகேஷ் ராஜ் மற்றும் பல குற்றம் சாட்டப்பட்டவர்கள், பசுவதைக் குற்றம் சாட்டிய ஒரு சில முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினர்.

பின்னர் சியானா காவல் நிலையப் பொறுப்பாளர் சுபோத் குமார் சிங், தனது குழுவினருடன் சம்பவ இடத்திற்கு வந்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, போக்குவரத்தை சீர்செய்யுமாறு கிராம மக்களைக் கேட்டுக் கொண்டார். அப்போது போராட்டக்காரர்களின் நிலையை கட்டுப்படுத்த முயன்றபோது கலவரம் வெடித்த நிலையில், இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்முறையின் போது, போராட்டக்காரர்களில் ஒருவரும் கொல்லப்பட்டார். போராட்டக்காரரின் மரணம் தொடர்பாக "பெயரிடப்படாத நபர்கள்" மீது தனி கொலை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment