தேசிய தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) 20 வயதான இளம்பெண் அஞ்சலி சிங், இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது கார் மோதியதில் பலியானார். அவரது உடலை கார் 10 கிலோ மீட்டர் வரை தரதரவென இழுத்துச் சென்றது பின்னர் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisment
அதாவது காரில் 5 பேர் இருந்ததாக கூறப்பட்டது. அப்போது தீபக் கன்னா என்பவர் காரை ஓட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்பது தெரியவந்தது. அதாவது காருக்குள் இருந்த மற்ற நால்வருடன் தீபக் கன்னாவின் செல்போன் சிக்னல் ஒத்துப்போகவில்லை. தீபக் கன்னா நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த அஞ்சலி சிங்கின் தாயார் ரேகா மற்றும் இளைய சகோதரி
மற்ற நால்வரிடம் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாததால் தீபக் கன்னாவை அவரது நண்பர்கள் சிக்க வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையின் சிறப்பு ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகர் ப்ரீத் ஹூடா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள ஐவரில் ஒருவரான அமித் கண்ணா தான் காரை ஓட்டியதாகக் கூறப்பட்டது. இதை நிரூபிக்கும் அறிவியல் ஆதாரம் தங்களிடம் இருப்பதாக ஹூடா கூறினார்.
Advertisment
Advertisements
மேலும், “விபத்திற்குப் பிறகு, அமித் தனது சகோதரர் அங்குஷ் கண்ணாவிடம் அதைப் பற்றி கூறினார். பின்னர் அங்குஷ், தீபக்கை (அவர்களது உறவினர்) உரிமம் வைத்திருக்கும் நபரை தொடர்பு கொண்டு குற்றம் சாட்டினார். அங்குஷ் மற்றும் அசுதோஷ் என்ற நபரை தேடி வருகிறோம். இரண்டு பேரும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள், ”என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
தொடர்ந்து, “விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கொடுத்தனர். சிசிடிவி காட்சிகள் சரிபார்க்கப்பட்டன, ஆனால் ஓட்டுநர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அன்று இரவு தீபக்கின் தொலைபேசி இருப்பிடம் அவனது வீட்டில் இருந்ததைக் கண்டுபிடித்தோம். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தீபக் மனம் உடைந்து வாக்குமூலம் அளித்தார்,” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
&feature=youtu.be
இதற்கிடையில் காரில் இருந்தவர்கள் மீது, கொலை, அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் அசுதோஷ், டிரைவரைப் பற்றி காவல்துறையிடம் பொய் சொன்னதாக தெரியவருகிறது என ஹூடா கூறினார்.
தீபக் மற்றும் அமித் ஆகியோருக்கு காரை கொடுத்ததாக அசுதோஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். "அவர் ஒரு கூட்டாளி, அவர் உடலைப் பற்றி அறிந்திருந்தார், ஆனால் எதுவும் சொல்லவில்லை, மேலும் தீபக் டிரைவர் என்று பொய் சொன்னார்" என்று ஒரு அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/