திருமணம் செய்து கொள்கிறாயா? சிறுமியை பலாத்காரம் செய்தவரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அப்பெண் மறுத்துவிட்டார்

Man accused of raping relative when she was minor, CJI-led bench asks: will you marry her? :  திங்கள் கிழமை அன்று, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியையே திருமணம் செய்து கொள்ளா தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிகழ்வின் போது அந்த பெண் மைனராக இருந்தார். தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மும்பை உயர் நீதிமன்றம், குற்றவாளிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. அதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். “நாங்கள் உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவில்லை. ஆனால், உனக்கு விருப்பமா என்பதை தெரிவிக்கவும். இல்லையென்றால் நாங்கள் தான் உன்னை வற்புறுத்தினோம் என்று கூறுவாய்” என்று அமர்வு கூறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்ட்ர மாநில அரசு ஊழியர் சார்பில் ஆஜரான ஆனந்த் திலீப் லான்ட்கே அதற்கு பதில் கூறினார். ஆரம்பத்திலேயே அந்த பெண்ணை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால் தற்போது அவர் வேறொரு பெண்ணை மணந்துள்ளார் என்று கூறவும் அவருடைய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. ஏ.எஸ். போப்பண்னா மற்றும் வி. ராமசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு, குற்றவாளி அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கும் வரை, நான்கு வார காலங்களுக்கு கைது செய்ய தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க : கணவரை பிரிந்த போது ஆதரவாக ஒருவரும் இல்லை; ஆனால்? மனம் திறக்கும் அமலா பால்!

48 மணி நேரம் ஒருவர் காவலில் வைக்கப்பட்டால் அவருடைய வேலையில் இருந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்கிறது மகாராஷ்ட்ர மாநில விதிமுறைகள். இதனை கருத்தில் கொண்டு மேல்முறையீடு செய்த போது, ஒரு சிறுமியை ஏமாற்றி, பலாத்காரம் செய்வதற்கு முன்பு இதையெல்லாம் கணக்கில் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியது அமர்வு.

அமர்வு நீதிமன்றத்தின் ஜாமீன் முடிவை எதிர்த்து அந்த பெண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவருடைய ஒப்புதல் அல்லது ஒப்புதல் இல்லாமல் நடைபெற்ற உறவு எந்த விதமான மாற்றத்தையும் வழக்கில் ஏற்படுத்திவிடப் போவதில்லை. இந்த குற்றம் நடைபெறும் போது அவர் மைனராகவே இருந்தார் என்ற காரணங்களை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அமர்வு நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதோடு, இந்த குற்றம் நடந்த போது அந்த பெண் நல்ல அறிவு முதிர்ச்சியுடன் தான் இருந்தார் என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டதாக கூறியுள்ளார்.

2014-15 காலத்தில் பாதிப்பிற்கு ஆளான பெண் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவருடைய தூரத்து சொந்தகாரரான குற்றவாளி அவருடைய வீட்டிற்கு அடிக்கடி வருவதுண்டு. ஒரு நாள் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இந்த குற்றம் தொடர்ந்து பலமுறை நடைபெற்றுள்ளது. அப்பெண்ணின் தாயாருக்கு உண்மை தெரிய வர அவர் காவல்துறையிடம் செல்ல முயன்றார். ஆனால் அப்போது குற்றம் சாட்டப்பட்ட நபரின் தாயார், பெண் மைனராக உள்ளார். 18 வயது ஆன பிறகு அவரை தங்கள் வீட்டிற்கு மருமகளாக ஏற்றுக் கொள்வதாக அவர் கூறினார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே உறவு நிலை இருந்தது என்றும், விருப்பத்தின் பெயரிலேயே உடலறவு கொண்டதாகவும் அப்பெண்ணின் தாயாரிடம் இருந்து ஒரு ஒப்புதல் கடிதத்தையும் பெற்றிருக்கிறார் குற்றம் சாட்டப்பட்டவர். “இதுவரை கூறப்பட்டிருக்கும் புகார்களின் அடிப்படையில், ஒருவர், 16 வயதில் இருந்து அந்த பெண் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டுள்ளார் என்று எளிதாக கூறிவிட இயலும் என்று கூறி விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீனை தள்ளுபடி செய்து மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் செல்வாக்குடன் இருப்பதாகத் தெரிகிறது, புகார் அளித்தவரிடம் இருந்தும் அவரது விதவை தாயிடமிருந்தும் இந்த எதையும் எழுதி வாங்கியிருக்க முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Man accused of raping relative when she was minor cji led bench asks will you marry her

Next Story
பெரிய ஊசி இருக்கிறதா? மோடி அடித்த ஜோக் பற்றி புதுவை நர்ஸ் வீடியோ பேட்டி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com