Advertisment

இ.டி அதிகாரி என புதுவை எம்.எல்.ஏ-க்கள் வீடுகளில் ரெய்டுக்கு போன நபர்; போலீசில் ஒப்படைப்பு

புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரி என கூறி ரெய்டு நடத்த சென்ற ஆசாமியை, சிவசங்கரன் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்  தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

author-image
WebDesk
Oct 23, 2023 20:54 IST
New Update
fake IT raid officer

இ.டி அதிகாரி என கூறி புதுவை எம்.எல்.ஏ-க்கள் வீடுகளில் ரெய்டுக்கு போன நபர்; போலீசில் ஒப்படைப்பு

புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரி என கூறி ரெய்டு நடத்த சென்ற ஆசாமியை, சிவசங்கரன் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்  தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisment

உழவா்கரை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன் வீட்டிற்கு நேற்று மாலை வந்த நபர் தன்னை அமலாக்கத் துறை அதிகாரி எனக் கூறி விசாரணை நடத்தியுள்ளாா். அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் எம்எல்ஏ உதவியாளா்கள்,மா்ம நபரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அந்த நபா் அமலாக்கத் துறை அதிகாரிபோல நடித்து பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த நபரை அங்கிருந்தவா்கள் தர்ம அடி கொடுத்து ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். முன்னதாக, அந்த நபா் நேரு எம்எல்ஏவிடம் தொலைபேசி வாயிலாகவும்,வைத்தியநாதன், கல்யாணசுந்தரம் ஆகியோர் வீடுகளுக்கு நேரடியாக சென்று இதேபோல் பேசி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடா்ந்து, பிடிபட்ட நபரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், திருவள்ளூா் மாவட்டம், திருவொற்றியூரைச் சோ்ந்த வரதராஜன்  எனத் தெரிய வந்தது. வரதராஜன் ஏற்கெனவே அரசியல் கட்சிப் பிரமுகா்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளாரா என்பது குறித்து ரெட்டியாா்பாளையம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment