திருமண விழாவில் சோகம்: மேடையில் மனைவியுடன் நடனமாடிய போது மணமகன் மரணம்

விளையாடுவதாக நினைத்து தொடர்ந்து பாடலை இசைத்துக் கொண்டு இருந்தனர்.

ராஜஸ்தானில்  திருமண விழாவில்  மணப்பெண்ணுடன் நடனமாடிய போது, மணமகன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த 6 ஆம் தேதி,இந்த  திருமண தம்பதியருக்கு அங்குள்ள பிரபல ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று காலை இவர்களின் திருமணம் நடந்து முடிந்து, இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மக்த்தியில் நடந்துக் கொண்டிருந்தது.

அப்போது, ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படத்தில் இருந்து ”துஜே தேகா செய்ய நீங்கள் ஜானா சனம்” என்ற பாடல் இசைக்கப்பட்டது. இந்த பாடலுக்கு மணமக்களை நடனம் ஆடும் படி அவர்களின் நண்பர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால்  இருவரும் அந்த பாடலுக்கு சந்தோஷமாக நடனமாடினர். ஆனால் அதுதான் அவர்களின் கடைசி நடனம் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

மணமகளுடன் ஆடிக்கொண்டிருந்த போதே, மாப்பிள்ளை திடீரென்று மேடையில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த மணப்பெண் மற்றும் உறவினர்கள் அவர் விளையாடுவதாக நினைத்து தொடர்ந்து பாடலை இசைத்துக் கொண்டு இருந்தனர். சிறிது நேரம் கழித்தும், மாப்பிள்ளை  படுத்துக்கொண்டே இருந்ததால் அனைவரும் ஓடிச் சென்றுப் பார்த்தனர்.

பின்னர், ஆம்புலன்ஸ்லில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மணமகனை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு  ஏற்கனவே இறந்து விட்டதாக  கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த புதுப்பெண் மற்றும் அவர்களின் குடும்பத்தார் மருத்துவமனையிலேயே கதறி துடித்துள்ளனர். திருமண மேடையிலேயே மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர்களது திருமணம் காதல் திருமணமாம். நீண்ட வருடங்களாக போராடி இறுதியில் இரு வீட்டாரையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். ஆனால், வாழ்க்கையை தொடங்குவதற்குள் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Man dies at wedding party while dancing to ddlj song watch video

Next Story
இந்தியாவில் கருணைக் கொலைக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com