scorecardresearch

பிறந்தநாள் கொண்டாடிய சில நிமிடங்களில் காதலியைக் கொன்ற காதலன்; பெங்களூருவில் அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை இரவு, பிரசாந்த் இருக்கும் இடத்திற்கு வந்து நவ்யா கேக் வெட்டினாள். சிறிது நேரத்தில், பிரசாந்த், கத்தியை எடுத்து, நவ்யா கழுத்தை அறுத்து, சரமாரியாக குத்தினார்

bengaluru
குற்றம் சாட்டப்பட்ட நவ்யாவின் காதலன் பிரசாந்த்

பெங்களூரில் வெள்ளிக்கிழமை ஒன்றாக பிறந்தநாள் கொண்டாடிய 26 வயது காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கனகபுராவைச் சேர்ந்த நவ்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பெங்களூரில் வசித்து வந்த அவர், காவல் துறையில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவில் (ஐ.எஸ்.டி) எழுத்தராகப் பணிபுரிந்தார். நவ்யாவின் காதலன் பிரசாந்த், அவளது தூரத்து உறவினர், மேலும் கனகபுராவை சேர்ந்தவர். இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்: கர்நாடக பா.ஜ.க அமைச்சர்கள் சொத்துப் பட்டியல்: 3 முதல் 8 மடங்கு வரை அதிகரிப்பு

நவ்யாவின் பிறந்தநாள் ஏப்ரல் 11. ஆனால் அவரது பிஸியான ஷெட்யூல் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று பிறந்தநாள் கொண்டாடினார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு, பிரசாந்த் இருக்கும் இடத்திற்கு வந்து நவ்யா கேக் வெட்டினாள். சிறிது நேரத்தில், பிரசாந்த், கத்தியை எடுத்து, நவ்யா கழுத்தை அறுத்து, சரமாரியாக குத்தினார்.

நவ்யா விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக ராஜகோபால் நகர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். “விசாரணையின் போது, ​​​​நவ்யா மற்ற ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததால் அவளைக் கொன்றதாக பிரசாந்த் கூறினார். இருவரும் சமீப காலங்களில் இந்த பிரச்சனைக்காக பலமுறை சண்டையிட்டுள்ளனர்,” என்று ஒரு அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Man girlfriend birthday celebration bengaluru

Best of Express