டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்ட பகுதியில் துப்பாக்கியால் சுட்டவர் கைது!

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் மையமான டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். கபில் குஜ்ஜர் என்று கூறிக்கொள்ளும் அந்த நபர், போராட்ட இடத்தில் இரண்டு முறை சுட்டார். மாலை 4:53 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

By: February 1, 2020, 11:36:54 PM

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் மையமான டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். கபில் குஜ்ஜர் என்று கூறிக்கொள்ளும் அந்த நபர், போராட்ட இடத்தில் இரண்டு முறை சுட்டார். மாலை 4:53 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.


போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தபோது அந்த நபர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுவதையும், இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டில் சொல்ல வேண்டும் என்று முதலில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் காட்டப்பட்டது. இந்த நபர் உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார் என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஷாஹீன் பாக் நகரில் பெண்கள் எதிர்ப்பாளர்கள் போலீஸ் முன்னிலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் “சட்டம் ஒழுங்கு நிலைமையை சரிசெய்வதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். பட்டப் பகலில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. தேர்தல்கள் வரும், போகும், அரசியலும் தொடரும், ஆனால் டெல்லி மக்களுக்காக, தயவுசெய்து சட்டம் ஒழுங்கை சரிசெய்வதில் கவனம் செலுத்துங்கள்” என்று அவர் கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மாறிவிட்டார். ஆனால், 1948 அல்லது 2020 ஆம் ஆண்டுகளில் அதற்கான தூண்டுதலை இழுக்கும் சித்தாந்தம் அப்படியே உள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

வடமேற்கு டெல்லியின் ரோகிணியில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் ஷாஹீன் பாக் மீது போராட்டம் நடத்தி வருவதாகவும், ‘ஆசாதி’ கோஷங்களை எழுப்புவதாகவும் குற்றம் சாட்டினார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்களுக்கு பிரியாணி வழங்குகிறது என்று ஆம் ஆத்மி கட்சியை ஆதித்யநாத் விமர்சித்தார்.

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திற்கு அருகே சிஏஎ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவில் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சில நாட்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதில் ஒரு மாணவர் காயமடைந்தார். பின்னர், துப்பாக்கியால் சுட்டவர் 17 வயதுடைய சிறார் என்றும் பின்னர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Man gun fire at shaheen bagh protest site in delhi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X