போபாலைச் சேர்ந்த தொழிலதிபர் தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை கொரோனா அச்சமின்றி டெல்லிக்கு அனுப்ப 180 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஊர்டங்கு காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உள்நாட்டு வணிக விமான சேவைகள் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன.
வெப்ப அலை, மீண்டும் துவங்கும் தொழிற்சாலை சேவையால் அதிகரிக்கும் மின் தேவை
மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த மதுபான தொழிற்சாலை அதிபரின் குடும்பம் போபாலில் சிக்கி கொண்டது. கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கிக்கொண்டிருந்த தனது மகள் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் பணிப்பெண் ஆகிய 4 பேரை டெல்லிக்கு அனுப்பி வைக்க ஏ-320 விமானத்தை வாடகைக்கு எடுத்தார். 180 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தின் வாடகை சுமார் ரூ. 20 லட்சம் என்று விமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பயணிகள் விமானத்தில் சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக, கூட்டத்தை தவிர்க்க மொத்த விமானத்தையும் வாடகைக்கு எடுத்துள்ளார்.
டில்லியிலிருந்து விமானிகளுடன் மட்டும் போபால் வந்த அவ்விமானம், தொழிலதிபரின் மகள், அவரது இரண்டு பேரப்பிள்ளைகள் மற்றும் உதவியாளர் ஒருவருடன் மீண்டும் டில்லி புறப்பட்டு சென்றது. விமானத்தை வாடகைக்கு எடுத்தவர் பெயரை குறிப்பிட விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சாதரணமாக ஏ320 விமானத்தை ஒரு டிரிப் வாடகைக்கு எடுக்க ரூ.20 லட்சம் ஆகும் என்கின்றனர்.
மது பானங்களைத் தொடர்ந்து பெட்ரோல் டீசலுக்கும் கொரோனா வரி!
போபால் ராஜபோஜ் விமான நிலைய இயக்குநர் அனில் விக்ரமை இந்த செய்தி குறித்த தகவலுக்காக தொடர்பு கொள்ள முயன்றும் அவரது இணைப்பு கிடைக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“